துபாயில் நடைபெற்ற 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி 2002 மற்றும் 2013-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை (CT India Champion For 3rd Time) வென்று மகுடம் சூடியுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து
துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இருவரும் அதிரடியான (CT India Champion For 3rd Time) ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழக்காமல் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணியை மிரட்டினர்.
நியூசிலாந்து அணி தடுமாற்றம்
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் சக்ரவர்த்தி வில் யங்கை 15 ரன்னில் வெளியேற்றினார். பிறகு பந்து வீச வந்த குல்தீப் யாதவ், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திராவை (CT India Champion For 3rd Time) போல்டாக்கி 37 ரன்னில் வெளியேற்றினார். இதன் பிறகு களமிறங்கிய கேன் வில்லியம்சன் 11 ரன்னிலும், டாம் லதம் 14 ரன்னிலும் வெளியேற நியூசிலாந்து அணி தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்க டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 34 ரன்களும் மற்றும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி வெற்றி (CT India Champion For 3rd Time)
இந்நிலையில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மாவின் அரைசதத்துடன் பார்ட்னர்ஷிப்பில் 105 ரன்கள் எடுத்துபோது சுப்மன் கில் அடித்த பந்தை க்ளென் பிலிப்ஸ் கேட்ச் பிடிக்க இந்திய அணியின் முதல் விக்கெட் விழுந்தது. பிறகு களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வெளியேறியதால் (CT India Champion For 3rd Time) இந்தியாவின் பக்கம் அழுத்தம் அதிகமானது. சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் அழுத்தத்தை குறைத்தனர். இறுதியில் வின்னிங் ஷாட்டாக ரவிந்திர ஜடேஜா பவுண்டரியை விளாச, இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.
தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா
1983-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை என இதுவரை 6 கோப்பைகளை (CT India Champion For 3rd Time) வென்றுள்ள இந்திய அணி 7-வது கோப்பையாக 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்று மகுடம் சூடியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இதுவரை இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று தோனிக்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற முத்திரை பதித்துள்ளார்.