Curd Benefits : தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இந்திய உணவு வகைகளில் தயிர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தயிர் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையில் பிரதானமாக உள்ளது மற்றும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. தயிர் எந்த உணவுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. தயிர் சாப்பிடுவது இந்தியாவில் ஒரு பொதுவான நடைமுறை. வட இந்தியாவில் உணவுக்குப் பிறகு தயிர் சாப்பிடுவது மரபாகவே உள்ளது. உதாரணமாக, நீங்கள் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றால், அங்குள்ள உணவகங்களில் மதிய உணவாக ஒரு கிண்ணம் தயிர் மற்றும் சர்க்கரையை வழங்குவார்கள். இதற்குக் காரணம், இப்படிச் சாப்பிடுவதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். மோர் குடிப்பதை விட தயிர் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும். தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Curd Benefits) தற்போது காணலாம்.
Curd Benefits - தயிரின் நன்மைகள்
சிறுநீர் பாதை தொற்று தடுப்பு
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை சிறுநீர் பாதை தொற்று. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிக்குழாய் ஆகியவை பாதிக்கிறது. இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி மற்றும் எரிச்சலை அனுபவிக்கின்றனர். இவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிண்ணம் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் எரிச்சல் குறையும். தயிரில் சிறுநீர்ப்பையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் திறன் உள்ளது.
செரிமானத்திற்கு நல்லது
தயிரில் அதிகமான புரோபயாடிக்ஸ் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது. மேலும் தயிர் நமது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்ப்பதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு ஏற்படாது.
உடல் எடை குறைப்பு
உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் தயிர் முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மட்டுமின்றி புரதச்சத்தும் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான சருமம்
தயிரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நமது உடலில் கொலஜன் உற்பத்தி அதிகரித்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது.
உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்க
தயிரில் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டுகள் தயிரில் அதிகமாக காணப்படுகின்றன. தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை என்றால், தினமும் காலையில் சர்க்கரை கலந்த தயிர் சாப்பிடுங்கள். இது உடலில் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
உடல் ஆற்றல்
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், முழு ஆற்றலைப் பெறவும் நம் உடலுக்கு குளுக்கோஸ் தேவை. இதற்கு தினமும் காலையில் ஒரு கிண்ணம் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதுடன் அன்றைய தினம் முழுவதும் தேவையான (Curd Benefits) சக்தியும் கிடைக்கும்.
எலும்பு வளர்ச்சிக்கு
தயிரில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் உடலுக்குத் தேவையான பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நமது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது.
முடி ஆரோக்கியமாக வளர
தயிர் அதிக நுண்ணுயிர் எதிர்ப்பி. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அதன் மூலம் பொடுகு தோற்றத்தை குறைக்கிறது. பல்வேறு பி வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் பி7 (பயோட்டின்), தயிரில் ஏராளமாக உள்ளன. பயோட்டின் உங்கள் தலைமுடிக்கு சிறந்தது மற்றும் விரைவாகவும் மிகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட தயிரை (Curd Benefits) உண்டு பயன்பெறுங்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!