நான் ஒரு கருவேப்பிலையா ? என கவலை வேண்டாம்…… கர்வம் கொள்ளவும்.
பொதுவாக வீடுகள் ஆபீஸ்கள் மற்றும் வெளியிடங்களில் மக்கள் கறிவேப்பிலையை போல பயன்படுத்துகிறார்கள் என்று வறுத்தப் படுவதுண்டு. ஆனால் அது தேவையற்றது என இந்த கட்டுரை மூலம் அவர்கள் உணரலாம் மற்றும் உயரலாம். கறிவேப்பிலை (Curry Leaves) ஆனது நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளன. அதனால் தினசரி உணவில் நாம் கறிவேப்பிலையைச் சேர்ப்பதன் மூலம் பல குறைபாடுகளை தடுக்கலாம் மற்றும் இயற்கையாகவே நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.
கறிவேப்பிலையில்(Curry Leaves) உள்ள ஊட்டச்சத்துக்கள்
இரும்புச்சத்து
கார்போஹைட்ரேட்
கால்சியம்
பாஸ்பரஸ்
புரதங்கள்
நார்ச்சத்து, மற்றும் பிற தாதுக்கள்
Vitamin A
Vitamin B & Vitamin B 12
Vitamin C
Vitamin E போன்ற வைட்டமின்களும் இவற்றில் உள்ளன மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அமினோ அமிலங்களும் உள்ளன.
100 கிராம் கறிவேப்பிலை (Curry Leaves) ஆனது சுமார் 108 கலோரி சக்தியை வழங்குகிறது. மேலும், கறிவேப்பிலையின் சாறு ஆனது உயர் இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அம்லோடிபைன் மருந்தின் செயலை போன்றது. சாம்பார், ரசம், சட்னி, பொரியல் போன்ற தென்னிந்திய உணவுகளில் தாளிக்க கறிவேப்பிலை ஆனது பயன்படுத்த படுகிறது.
கறிவேப்பிலை (Curry Leaves) வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்
தலைமுடியை சரியான முறையில் பராமரிக்க சிறந்தது
கறிவேப்பிலையில் அதிக அளவில் உள்ள பீட்டா கரோட்டின், புரோட்டீன் போன்றவை முடி உதிர்வதைத் தடுக்கவும் மற்றும் இறந்த மயிர்க்கால்களை நீக்கவும் உதவுகிறது. உண்மையில் இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க மற்றும் குளிர்ச்சியளிக்க உதவுகிறது.
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு சிறந்த டானிக் உருவாக்கப்படுகிறது. இந்த டானிக் முடி நரைப்பதை தடுக்கும் மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டும். இது நம் முடியை பலப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கவும், பொடுகு மற்றும் வறண்ட உச்சந்தலையைத் தடுக்கவும் உதவியாக இருக்கும். நம் தலைமுடிக்கு கறிவேப்பிலை (Curry Leaves) மிகவும் சிறந்தது
இரத்த சோகை சிகிச்சைக்கு நல்லது.
இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது, இவை இரும்பு அளவை உடலில் மேம்படுத்துவதில் முக்கியமானவை. இவை இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரிய அளவில் உதவுகின்றது.
கண்களுக்கு சிறந்தது
கறிவேப்பிலையில் உள்ள அதிக அளவு வைட்டமின் A நம் கண்களுக்கு நன்மை பயக்கிறது. இது நல்ல பார்வையை பராமரிக்க உதவுகின்றது.
சரும பாதுகாப்பிற்கு நல்லது
தோலில் ஏற்படும் காயங்கள் , லேசான தீக்காயங்கள் மற்றும் வெடிப்புகளை ஆற்ற கறிவேப்பிலை (Curry Leaves) உதவுகிறது. இது தொற்று நோய்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கின்றது. எனவே கறிவேப்பிலை சில சோப்பு கலவைகளில் ஒரு அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.
பாக்டீரியாவைக் கொல்லுகிறது
கறிவேப்பிலை (Curry Leaves) ஆனது பாக்டீரியா எதிர்ப்பு சக்தி மிக்கது. கறிவேப்பிலையில் உள்ள E.coli மற்றும் Staphylococcus மூலம் பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
வாய்வழி ஆரோக்கியத்திற்கு நல்லது
மனிதர்களின் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சூழலை கறிவேப்பிலை (Curry Leaves) உருவாக்குகிறது. இதனால் வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் வாய்வழி நோய்களைத் தடுக்க உதவுகின்றது.
மூளையை பாதுகாக்கிறது
கறிவேப்பிலையை உண்பதால் நமது மூளையை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கின்றது. நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் அல்சைமர் நோயை வராமல் தடுக்கிறது.
கறிவேப்பிலை (Curry Leaves) முதுமையின் காரணமாக பொதுவாகக் முதியவர்களிடம் ஏற்படும் ஞாபக மறதி (நினைவக இழப்பு) வராமல் தடுக்கிறது. பொதுவாக கறிவேப்பிலை நல்ல நியூரோபிராக்டிவ் விளைவுகளை தருகின்றது.
காலை நோய்க்கு எதிராக உள்ளது
கறிவேப்பிலை (Curry Leaves) தேநீர் ஆனது காலை சுகவீனம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கறிவேப்பிலை தேநீர் அவர்களின் காலை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறந்த வலி நிவாரணி
பாரம்பரியமாக வலி நிவாரணியாக உள்ள கறிவேப்பிலை (Curry Leaves) வலியைக் குறைப்பதில் நல்ல பலனை தருகின்றது.
எடை குறைக்க மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் உதவுகிறது.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கறிவேப்பிலை (Curry Leaves) கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதனால் எடை குறைக்க கறிவேப்பிலை உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவு குறைவதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-மியூட்டாஜெனிக் பல்வேறு வகையான புற்றுநோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றது.
கறிவேப்பிலையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
வயிற்று நோய்களை சமாளிக்க உதவுகிறது
கறிவேப்பிலை (Curry Leaves) மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும். கறிவேப்பிலை இலையின் சாறு எடுத்து அல்லது பேஸ்ட் வடிவில் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது
கறிவேப்பிலையை உட்கொள்வது நீரிழிவு மற்றும் அது தொடர்பான சிக்கல்களை நிர்வகிக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கறிவேப்பிலை (Curry Leaves) குறைக்கிறது. இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது. கறிவேப்பிலையை உண்பதால் நீரிழிவு மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் வராமல் தடுக்கிறது.
கல்லீரலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க
கறிவேப்பிலையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது கல்லீரலைப் பாதுகாக்கிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
கறிவேப்பிலையில் உள்ள கிருமி நாசினிகள் லேசான தீக்காயங்கள் அல்லது சொறி உள்ள இடங்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய கறிவேப்பிலையின் அளவு
8 முதல் 10 புதிய கறிவேப்பிலை (Curry Leaves)
1/2 முதல் 1 தேக்கரண்டி கறிவேப்பிலை தூள் (Curry Leaves Powder)
1 முதல் 2 கறிவேப்பிலை காப்ஸ்யூல்கள்
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தாவர கலவைகள் கறிவேப்பிலையில் உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் கலவைகள் நம்மை ஆரோக்கியமாக மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து நம் நரம்பு மண்டலம், இருதய அமைப்பு, சிறுநீரகங்கள் போன்றவற்றை பாதுகாக்கின்றன மற்றும் நோய்களை தடுக்கின்றன.