Cyclone Montha : வங்க கடலில் உருவாகிறது "மோந்தா" புயல்..!
வங்கக்கடலில் இன்று உருவாகியிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புயலாக மாறுகிறது. வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி உருவாககும் புயலுக்கு (Cyclone Montha) மோந்தா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் அக்டோபர் 3-ம் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. அதேசமயத்தில் (Cyclone Montha) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை. இதனிடையே வலுவிழந்து குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழை பொழிவு குறைந்துவிட்டது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 27-ம் தேதி புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு Montha புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாகவும், வரும் 27-ம் தேதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மோந்தா புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், அக்டாபர் 27-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோந்தா புயல் (Cyclone Montha)
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து, வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறுகையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடைய வாய்ப்பு உள்ளதாகவும் (Cyclone Montha) தெரிவித்துள்ளார். மேலும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 27-ம் தேதி புயலாக மாறி வேகமாக வலுவடைந்தால், ஆந்திராவை நோக்கி நகரும் எனவும், அதேசமயத்தில் புயல் வலுவடைவதில் சற்று தாமதம் ஏற்பட்டால், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சாதாரண புயலாகவோ வடதமிழகம் – தெற்கு ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!