Dadasaheb Phalke Award 2023 : நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது
நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட மோகன்லால், இந்திய திரையுலகிற்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படுவதாக மத்திய அரசு (Dadasaheb Phalke Award 2023) அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி புது டெல்லியில் நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார்
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மோகன்லால். 1980-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான மோகன்லால் இன்று வரை தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இந்திய திரைத்துறையில் ஒரே ஆண்டில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால். மேலும் அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்துள்ளது.
1980-ம் ஆண்டு இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். தற்போது வரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் சமீபத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.260 கோடிக்கு மேல் வசூலித்து, மலையாள சினிமாவில் ஒரு புதிய சாதனையை படைத்தது. அவர் ‘எம்புரான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நந்தா கிஷோர் இயக்கத்தில் ‘விருஷபா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் மோகன்லால் நடிகர் மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில் நிலைத்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக வலம் வரும் மோகன்லாலுக்கு மத்திய அரசு, தாதாசாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.
தாதாசாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award 2023)
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தாதாசாகேப் பால்கே விருது தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும் மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் மோகன்லாலுக்கு மத்திய அரசு 2001-ல் பத்மஸ்ரீ விருதையும், 2019-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!