நேற்று நடைபெற்ற DC vs GT IPL 2026 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆனது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப் பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆனது இந்த சீசனின் தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து தனது அபார ஆட்ட திறமையை வெளிப்படுத்தியது. தனது உடலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முந்தைய போட்டியைத் தவறவிட்ட சுப்மன் கில், இந்தப் போட்டியில் அபார ஆட்ட திறமையை வெளிப்படுத்தி முன்னின்று குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து சிறப்பாக 104 ரன்கள் குவித்தனர். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்துள்ளார். இது ஐபிஎல்- லில் அவர் பெற்ற முதல் அரைசதம் ஆகும். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் தங்களது சிறந்த ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்காரை உயர்த்த உதவினர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தனர்.
211 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா கூட்டணி சிறப்பான தொடக்கத்தை அளித்து 76 ரன்கள் சேர்த்தனர். நிசங்கா 41 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், கே.எல். ராகுல் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 52 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தார். இது கே.எல். ராகுல் ஐபிஎல் போட்டியில் பெற்ற 41-வது அரைசதம் ஆகும். ரஷித் கான் தனது சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணியின் மிடில் ஆர்டர் வீரர்களை நிலைகுலையச் செய்தார். நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, மற்றும் அக்ஸர் படேல் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை ரஷித் கான் 17 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டு வீழ்த்தினார். இறுதிப் பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆனது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது.
DC vs GT IPL 2026 Highlights : ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
தனது சிறந்த பந்து வீச்சின் மூலம் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 17 ரன்களை மட்டுமே அடிக்க விட்ட ரஷீத் கான் ஆட்டத்தின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.