Gistak Media

DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற (DC vs PBKS Highlights) DC vs PBKS போட்டியில், PBKS அணி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் சேஸ் செய்த ஒரு அணி என்ற சாதனையை பதித்துள்ளது. 

இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டு PBKS அணி ஆனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 262 ரன்களைச் சேஸ் செய்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது PBKS அணி ஆனது தனது சொந்தச் சாதனையைத் தானே முறியடித்து ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பேட்டிங்கை தேர்வு செய்த DC-ன் அதிரடி ஆட்டம்

பதும் நிஷங்கா தொடக்க வீரராகக் களமிறங்கி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த கே.எல்.ராகுல் மற்றும் நிதிஷ் ராணா ஜோடி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் படைத்த ஒரு சாதனை கூட்டணி என்ற முத்திரையை பதித்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப் 220 ரன்களைச் சேர்த்தது. கே.எல்.ராகுல் 152 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றும்  டி20 போட்டியில் 150 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். நிதிஷ் ராணா 44 பந்துகள் விளையாடி 91 ரன்கள் எடுத்தார்.  DC அணி ஆனது 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்தது. PBKS அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் 2 எளிதான கேட்ச்களைக் கருண் நாயர் தவறவிட்டது DC அணியின் தோல்விக்கு (DC vs PBKS Highlights) ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

DC vs PBKS Highlights - GISTAK media

DC vs PBKS Highlights : PBKS அணியின் அசுரவேகப் பதிலடி ஆட்டம்

PBKS அணியின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி அதிரடியாக தொடங்கி வெறும் 42 பந்துகளில் 126 ரன்களை குவித்தனர். பிரப்சிம்ரன் சிங் 76 ரன்களும் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா 43 ரன்களும் எடுத்தனர். நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். PBKS‑அணிக்காக முக்கிய பங்களிப்பு செய்த பவுலர்கள் Rasikh Dar, Prevale Wells, மற்றும் Harshit Rana ஆவர்PBKS அணி ஆனது டி20 வரலாற்றில் மிக அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை பெற்றுள்ளது.

கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்

(DC vs PBKS Highlights) அபாரமான பேட்டிங்கிற்காக கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். 67 பந்துகளில் 152 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் அதிக ரன் சேர்த்த இந்திய பேட்டர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top