DD Returns Movie Single Track: சந்தானத்தின் பிரெஞ்சு குத்து
சந்தானம் ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானார். “மன்மதன்” திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் இவர் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இவர் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். சந்தானம் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர். அவரது நகைச்சுவைத் திறமைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. இந்த ஹாரர் காமெடி படத்தை இயக்குனர் பிரேமானந்த் இயக்கி வருகிறார். ஷேம்லஸ் சதீஷ் கதாபாத்திரத்தில் சந்தானம் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிக்கிறார். இப்படத்தை ஆர்.கே எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் பிரபல நடிகை சுரபி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் புதுச்சேரி பிரெஞ்சு பெண்ணாக நடிக்கிறார். இவர்களுடன் ரெட்டி கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், சங்கர், விஜயன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இருந்து “பிரெஞ்சு குத்து” வீடியோ படலானது நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இசைமைப்பாளர் அப்ரோ இசையமைத்துள்ளார்.









4 thoughts on “DD Returns Movie Single Track: சந்தானத்தின் பிரெஞ்சு குத்து”
Love this blog! The content is always so relevant and insightful, keep up the great work!
Thank You So Much For Your Comment
Keep up the amazing work!
Thank You So Much For Your Comment