Gistak Media – Cinema News | Trending News | Latest News

Demonte Colony 3 : ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது டிமாண்டி காலனி 3-ம் பாகத்திற்கான முக்கிய அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் மர்மமான (Demonte Colony 3) மற்றும் திகில் கலந்த காட்சிகள் உள்ள சூழலை சித்தரிக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது மிகவும் மிரட்டலான வகையில் அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் ஆனது வெளியாகும் என்று கூறப்படுகிறது.

டிமாண்டி காலனி 3

டிமாண்டி காலனி 1 இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து டிமான்டி காலனி 2 கடந்த 2024 ஆம் ஆண்டு அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிப்பில் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது டிமாண்டி காலனி 3 ஆம் பாகத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. டிமாண்டி காலனி 3 படம் ஆனது பேய் மற்றும் அமானுஷ்யங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை முந்தைய டிமாண்டி காலனி படத்தின் 1 ஆம் பாகம் மற்றும்  டிமாண்டி காலனி படத்தின் 2 ஆம் பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. வரும் தமிழ் புத்தாண்டு அல்லது அதற்கு முன்பாக இந்தப் படம்  வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் அஜய் ஞானமுத்து

அனைவரது கவனத்தையும் ஈர்த்த டிமாண்டி காலனி 1 வெற்றிப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கிய இமைக்கா நொடிகள் படமும்  நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படம்  எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த ஏமாற்றத்தை தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து (Demonte Colony 3) கடந்தாண்டு இயக்கிய டிமாண்டி காலனி 2 அவருக்கு ஒரு நல்ல கம்பேக் அளித்துள்ளது.

Demonte Colony 3 - Gistakmedia

டிமாண்டி காலனி 3 படக்குழு (Demonte Colony 3)

டிமாண்டி காலனி படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்திருந்த அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அருண் பாண்டியன், ரமேஷ் திலக், அர்ச்சனா ஆகியோர் இந்த டிமாண்டி காலனி 3 பாகத்திலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் குருசோமசுந்தரமும் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை குமரேஷ் செய்திருக்கிறார். இத்திரைப்பட வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருக்கிறார். இந்த 2026 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களின் பட்டியலில் இந்த டிமாண்டி காலனி 3 முக்கியமானதாக அமையும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top