Gistak Media – Cinema News | Trending News | Latest News

Desanthiri Book: தேசாந்திரி புத்தக விமர்சனம்

பயணம் என்பதன் விளக்கம்:

பயணம்! மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தனது வாழ்க்கையில் தொடங்கிய பயணம் பிற பயணங்களுக்கு தொடக்கமாக அமைகிறது. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும்  ஒருவிதம் என்பது போல் மனிதர்களின் மனநிலையும் பல விதங்களில் தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதங்களில் மனநிறைவு ஏற்படும். இதில் பயணம் என்றாலே பொதுவாக அனைவர்க்கும் மனநிறைவு மட்டுமின்றி, மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

சிறு வயதில் முதன்முதலில் நாம் இந்த உலகத்தை எப்படி பார்த்திருப்போம்? நம் வீட்டின் சாளரம் வழியாகத்தான் இந்த உலகத்தை நாம் முதலில் பார்த்தோம் அப்படி எட்டி பார்த்த உலகத்தில் தான் சிறிது காலம் கழித்து நடக்க ஆரம்பித்தோம். அதன் பிறகு பள்ளி பருவத்தில் நம்முடைய முதல் பயணம் மிதிவண்டியில் தெருக்களை வலம் வருவதில் தொடங்கி அதன் பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோரு விதமான பயணங்களை மேற்கொள்கிறோம்.

பயணம் என்பது நம் வாழ்வில் நம்முடனேயே பிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஊர் சுற்றுவது அதிலும் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது   என்றாலே அலாதியான இன்பம் தான். ஊர், மாநிலம், நாடு என்று பிற புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அங்கிருக்கும் பிற மொழி பேசும் மனிதர்கள், புதுவகையான உணவுமுறைகள், வித்தியாசமான இடங்கள், அங்கிருக்கும் சமூக அமைப்பு, கடை வீதிகள், அங்கிருக்கும் புதுவகையான பொருட்கள் போன்றவைகளை முதல்முறையாக ரசிக்கும்போது நமக்கும் கிடைக்கும் அனுபவங்களை வேறு எந்தவிதமான அனுபவங்களோடும் ஒப்பிட முடியாது.  

இன்றய டிஜிட்டல் உலகத்தில் பயணம் செல்வது குறைவாக இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பால் நிறைய மக்கள் பயந்து பயணம் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். இதனால் பயணம் மேற்கொள்வது இன்னும் குறைந்துள்ளது. இயல்பாக காணொலியில் ஒரு இடத்தை பார்ப்பதற்கும், பயணம் மேற்கொண்டு ஒரு இடத்திற்கு போவதற்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள் இருக்கு. அப்படி போறதுனால நமக்கு என்ன மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் தேசாந்திரி (Desanthiri Book) என்னும் புத்தகத்தில் எஸ். ராமகிருஷ்ணன் விவரித்துள்ளார்.

என்னதான் பயணம் மேற்கொண்டாலும், ரசிக்கும் தன்மை இருந்தால் மட்டுமே ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவிக்க முடியும். இயல்பாக பயணம் மேற்கொள்பவர்கள் அவர்களின் அனுபவங்களை பயண கட்டுரைகளாக மட்டுமே எழுதுகின்றனர். ஆனால் அதையும் தாண்டி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு படி மேலேசென்று பயண அனுபவங்களுடன், அந்த இடத்தின் சிறப்பு, அதன் வரலாறு, அவ்விடத்தில் ஏற்பட்ட சிலிர்ப்புகள் போன்றவைகளைப் பற்றி தெளிவாகவும், விளக்கமாகவும் கூறியுள்ளார்.

இந்த புத்தகத்தை படிக்கும்போது இந்தியாவில் நிறைய இடங்களுக்கு சென்றுவந்த உணர்வு ஏற்படும். அது மட்டுமின்றி இந்த புத்தகத்தை வாசிக்கும்போது பயணம் மேற்கொள்ள தூண்டவும் செய்யும்.

நூல்முகம்:

தேசாந்திரி (Desanthiri Book) என்னும் புத்தகத்தை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் சிறு வயதிலிருந்தே படித்து வந்த புத்தகத்தின் மூலமாகவும், பயணங்களின் மூலமாகவும் இன்று பெரிய எழுத்தாளராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். பொதுவாக இவர் மற்றவர்களுக்கு சொல்லும் அறிவுரை மனதளவில் பயணம் செய்வதற்கு நிறைய புத்தகங்களை படிக்கவேண்டும் என்றும், குறைந்தபட்சம் வருடத்தில் ஒருமுறையாவது இதுவரைக்கும் நாம் போகாத நமக்கு அருகிலே இருக்கக் கூடிய இடம் அல்லது ஊருக்கு பயணம் மேக்கொள்ள வேண்டும் என்று நிறைய பேச்சுக்களில் கூறியுள்ளார்.

இவர் இந்த தேசாந்திரி (Desanthiri Book) என்னும் புத்தகத்தில் குறைந்தபட்சம் 30 அத்தியாயங்களை எழுதியுள்ளார். இந்த ஒவ்வொரு அத்தியாயங்களை இவர் ஆரம்பிக்கும்போதும் கவிஞர்கள் எழுதியுள்ள சின்னச்சின்ன கவிதைகளை அந்தந்த அத்தியாயங்களுக்கு ஏற்ற வகையில் முன்னுரையில் கொடுத்து அதன்பிறகு அத்தியாயங்களை விவரிக்கிறார்.

இதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதியும் அவர் சென்று பார்வையிட்ட இடங்ககளைப்பற்றியும், அந்த இடத்தில் நடந்த வரலாறுகளையும், அவர் பார்த்ததையும் எழுதியுள்ளார். உதாரணமாக பனி சூழ்ந்த ஒரு சூழ்நிலையில் இருந்திருக்கிறார் என்றால் அந்த பனியை பற்றின அனுபவத்தை பனி இரவு முழுவது விழித்திருந்தது, பனிக்கு இரக்கமில்லை, பனி வீடுகளின் மீதும் படர்ந்திருந்தது  இது மாதிரியான வரிகளை அந்த சூழலுக்கு ஏற்ப எழுதியுள்ளார்.

இதுபோன்ற கவிதைகள் நிறைந்த வரிகளை பயன்படுத்தி உள்ளதால் இந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வம் மட்டுமின்றி அந்த இடத்திற்கே சென்றுவந்த ஒரு உணர்வும் ஏற்படும். இதில் எல்லா தொகுப்புகளும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அவற்றில் ஒருசில தொகுப்பை இந்த பதிவில் பார்ப்போம்.

நூல் (Desanthiri Book) பற்றிய விமர்சனம்:

புராணத்தில் சொல்லப்படும் கதையானா நல்லதங்காள் கதை அதாவது நல்லதங்காளும் அவளது மூன்று பிள்ளைகளும் வறுமையின் காரணமாக கிணற்றில் விழுந்து இறந்து விடுவார்கள். அந்த கிணறு விருதுநகர் பக்கத்தில் அர்ஜூனாபுரத்தில் இருக்கிறது என்றும் அதை அங்குள்ள மக்கள் இன்றும் வணங்கி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அந்த காலகட்டத்தில் பெண்கள் மேகொண்ட துயரங்களையும், அவர்கள் இன்றைக்கும் மேற்கொள்கின்ற பிரச்சனைகளையும் வெளிப்படுத்தும் பிரதிநிதித்துவமாக இந்த கிணறு இருக்கிறது என்றும் ஒரு அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.

அதேபோல் இன்னொரு அத்தியாயத்தில் இவர் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது இவர் பக்கத்தில் மூன்றாம் பாலினமான அரவான் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் இவர் பக்கத்தில் உட்காருகிறார். அப்போது அந்த பெண்ணிடம் என்ன என்று விசாரிக்க அதற்கு அந்த பெண் நான் கூவாகம் என்னும் விழாவிற்கு விழுப்புரம் பக்கம் செல்கிறேன் என்றும் நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை எல்லாரும் கூட்டமாக சேர்ந்து அந்த கோவிளுக்கு சென்று ஒரு திருவிழா போல் கொண்டாடுவோம் என்று சொல்கிறார். அதை கேட்ட எஸ். ராமகிருஷ்ணன் அந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த மூன்றாம் பாலினம் சொல்லக்கூடிய அந்த சமூக மக்களின் கஷ்டங்களையும்,அவர்கள் எப்படி அந்த விழாவை நடத்துகிறார்கள் என்பதை ஒரு அத்தியாயம் முழுவதுமாக உருவாகியுள்ளார். இதை படிக்கும்போது நமக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும். இன்னொரு அத்தியாயத்தில் சென்னையில் உள்ள (ST.Thomasmout) பரங்கிமலை பத்தின ஒரு செய்தியை எழுதியுள்ளார். அதாவது எவரெஸ்ட் மவுண்டோட உயரத்தை அளக்க அதோட ஆரம்ப புள்ளியாக அந்த காலத்தில் கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு முன் பழமையான பரங்கிமலையில் இருந்து எது உயரம் என்று அளவிடுகிறார்கள்.

அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது இந்த பரங்கிமலை என்று பரங்கிமலையின் சிறப்புகளையும் அதன் வரலாறுகளையும் ஒரு அத்தியாயம் முழுக்க குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இவர் எழுதியுள்ள மற்றொரு அத்தியாயத்தில். பள்ளி பருவத்தில் நாம் படித்த போர்கள், அதன் வருடங்கள், ஆட்சி மாற்றங்கள் போன்றவைகளை படித்திருப்போம்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும்போது அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். உலகப்போர்கள் நடக்கும்போது அப்போது ஏற்பட்ட சிறு நிகழ்வு கூட மற்ற நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவையெல்லாம் நம் புத்தகத்தில் 10 மதிப்பெண் கேள்வியாக வந்திருப்பதை பார்த்து இவ்வளவுதானா? என்ற கேள்வியும் எழுகிறது என்று எழுதியுள்ளார். மேலும் நாம் வெயிலில் விளையாடி உடல் கருத்திருப்போம் அந்த நிற மாற்றத்தை எப்படி சொல்கிறார் என்றால் வெயில் வரைந்த ஓவியம் என்று சொல்கிறார்.

பயனங்கள் மேற்கொள்ளும்போது நாம் நிறைய மனிதர்களை சந்தித்தாலும் அவர்களை நாம் மீண்டும் சந்திப்பதில்லை அதற்கான வாய்ப்பும் நமக்கு அமைவதில்லை. நாம் சந்திக்கு மனிதர்கள் சுவாரஸ்யமானவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் மீண்டும் சந்திக்க போவதில்லை என்பதால் அவர்கள் நமக்கு இன்னும் தனித்துவமானவர்களாக ஆகிறார்கள். அதே போல் அவர் சந்தித்த அவருக்கு தனித்துவமாக இருந்தவர்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

பள்ளி பருவத்தில் நம்மை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, விடியற்காலையில் அந்த பள்ளிக்கு வருவோம் ஆனால் அந்த சமயத்தில் நமது மனநிலையானது வித்தியாசமாக தெரியும் தினமும் பார்த்த பள்ளிதான், அதே வகுப்பறைதான் இருந்தாலும், இது நம்ம பள்ளிதானா என்கிற ஒரு புதுமை தெரியும் இந்த அனுபவத்தையும் இவர் எழுதியுள்ளார். மழையை பற்றி சொல்லும்போது, மழை பெய்தால் ஆண்கள் எல்லாம் மழை மழை என்று சொல்லுவார்கள் ஆனால் இதையே பெண்கள் தண்ணி தண்ணி என்று சொல்லுவார்கள். என இதுபோன்ற சிறு சிறு உணர்வுகளை அற்புதமாகவே  பதிவு செய்துள்ளார்.

என்னால் எங்கும் பயணம் செய்ய முடியவில்லை. கொரோனா வந்ததில் இருந்து நான் வீட்டிலேயே இருக்கிறேன் எனக்கு இதுவே பழகிவிட்டது என்று நினைப்பவர்கள். இந்த உணர்விலே இருப்பவர்கள் வீட்டில் இருந்துகொண்டே நாம் பார்க்கும் நிகழ்வுகளை, நாம் ரசிக்கும்  நிகழ்வுகளை இன்னொருத்தர் சொல்லி கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இப்படியொரு உணர்வை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த தேசாந்திரி (Desanthiri Book) என்னும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தை வாங்கி படிக்கலாம் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top