-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Dhanush Upcoming Telugu Movie : முதன் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா...
Dhanush Upcoming Telugu Movie :
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக இருக்கும் தனுஷ், தனது அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் பிரியங்கா மோகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கேப்டன் மில்லருக்குப் பிறகு தனுஷ் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியிலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவரை ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் விரைவில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்டமாக வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
இதுதவிர தெலுங்கிலும் தனுஷ் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை சேகர் காம்முலா இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகியுள்ளது. அறிவிப்பு வெளியானதன்படி இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலமாக தான் இருவரும் முதன் முதலாக இணைய உள்ளனர். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!