Dhoni As Mentor For 2026 T20 World Cup : இந்திய டி20 உலகக் கோப்பை அணிக்கு ஆலோசகராகும் தோனி
இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு, தோனி மீண்டும் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் (Dhoni As Mentor For 2026 T20 World Cup) வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இளம் வீரர்களைக் கொண்ட அணியாக உருமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் தோனி இந்திய டி20 அணிக்கான வழிகாட்டியாக மீண்டும் நியமிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றவர்
தோனி தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக மகேந்திரசிங் தோனி போற்றப்படுகிறார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பை தொடர் (Dhoni As Mentor For 2026 T20 World Cup)
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் ஆலோசராக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிசிசிஐ-யின் இந்த வாய்ப்பை தோனி ஏற்றுக்கொண்டால், 2 வது முறையாக இந்திய அணிக்கு ஆலோசராக செயல்படுவார். இதற்கு முன், தோனி கடந்த 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை அணிக்கு ஆலோசகராகும் தோனி என்ற செய்திக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கருத்து (Dhoni As Mentor For 2026 T20 World Cup) தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மகேந்திரசிங் தோனி என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிப்பது மிகவும் கடினம். மேலும் அவரது அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!