Gistak Media

Dhurandhar 2 Box Office : 1000 கோடி நிச்சயம்.. வெறித்தனமான வசூல் வேட்டையில் ‘துரந்தர் 2’.!

தொடக்கத்தில் இந்தி மொழியில் மட்டும் வெளியான துரந்தர் 2 திரைப்படமானது  தற்போது (Dhurandhar 2 Box Office) தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. `துரந்தர் 2′ ஆனது 5 மொழிகளில் வெளியாகி 2026-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. துரந்தர் 1 திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியானது துரந்தர் 2 என்ற இரண்டாம் பாகதிரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்தியில் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனை

கடந்த மார்ச் 19 வியாழக்கிழமை அன்று வெளியான துரந்தர் 2 திரைப்படமானது முதல் நாளில் Rs. 99 கோடி ரூபாயை வசூலித்து, இந்தியில் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. மேலும் உலகெங்கும் முதல் நாள் வசூலில் Rs.125 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.

மிகுந்த வரவேற்பை பெற்று வரும் ஸ்பை த்ரில்லர் கதை (Dhurandhar 2 Box Office)

இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லர் கதை, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. துரந்தர் 1 முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான  துரந்தர் 2-ல் ஜஸ்கிரத் சிங் ராங்கி (ரன்வீர் சிங்) குடும்ப கொடுமைக்கு பழிவாங்கி சிறைத் தண்டனை (Dhurandhar 2 Box Office) அனுபவித்து வருகிறார். இப்படி இருக்கும் காலகட்டத்தில் இந்திய உளவுத்துறை ஆனது அவரை பாகிஸ்தான் பயங்கரவாத வலையமைப்புகளுக்கு எதிரான ரகசிய மிஷனுக்கு பயன்படுத்துகிறது. இத்திரைப்படத்தின் கதையானது ஹம்சா போன்ற எதிரிகளை தாக்குதல் மற்றும் தேசப்பற்று உணர்வுடன் பழிவாங்கும் நிகழ்கால கதை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

Dhurandhar 2 Box Office - Gistakmedia

'துரந்தர் 2' ஆனது 1000 கோடி வசூலை கடக்கக்கூடும் என கருத்துக் கணிப்பு

இந்தி மொழி திரைப்படங்களில் மிக வேகமாக ரூபாய் 1000 கோடியை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கும் திரைப்படம் துரந்தர் 2 எனச் சொல்லப்படுகிறது. துரந்தர் 1 திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் 2  எப்படி  இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பின் காரணமாக, மக்கள் கூட்டம் பெரிய அளவில் இத்திரைப்படத்தை காண செல்கிறார்கள். எனவே அந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பின் காரணமாக (Dhurandhar 2 Box Office) படத்தின் வசூல் மிக விரைவாக அதிகரித்து வருகிறது. மேலும் திரை பிரபலங்​கள் பலரும் இத்திரைப்படத்தைப் ​ பாராட்டி கருத்து தெரி​வித்​து வருவ​தால் ஏராள​மானோர் இத்திரைப்படத்தை காண ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

மார்ச் 19, 2026 அன்று வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில் ‘துரந்தர் 2’ படம் இந்தியாவில் 519 கோடி ரூபாய் நிகர வசூல் செய்துள்ளது, மற்றும் உலகளவில் ரூபாய் 800 கோடியை கடந்துள்ளது. இந்த தொடரும் உலக வசூல் சாதனை விரைவான வசூல் வளர்ச்சியை காட்டுகிறது. விரைவில் 1000 கோடி மைல்கல்லை எட்டும் என கருத்துக் கணிக்கப்பட்டுள்ளது.​

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top