ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் 2 படம் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் (Dhurandhar 2 Review) நள்ளிரவு மற்றும் அதிகாலைக் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த துரந்தர் 2 படமானது கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் ரூ.1300 கோடி வசூலித்த துரந்தர் 1 என்ற படத்தின் தொடர்ச்சி ஆகும்.
துரந்தர் 2 படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர்கள்
இப்படத்தில் ரன்வீர் சிங், ஆர்.மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ராகேஷ் பேடி, மனவ் கோகில் மற்றும் டானிஷ் பண்டோர் ஆகிய துணை நடிகர்கள் நடித்துள்ளனர். ஷாஷ்வத் சாச்தேவ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தியன் ஐடல் சீசன் 14-ன் வெற்றியாளரான பாடகர் வைபவ் குப்தா ‘மன் அட்கேயா’ பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளார். இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
ஆதித்யா வன்முறை, மற்றும் நாட்டுப்பற்று கலந்த படைப்பாக வழங்கியுள்ளார்
ஆதித்யா தார் ஒரு அச்சமற்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்திய சினிமாவில் இந்தப் படம் ஒரு புதிய சினிமா அலையின் தொடக்கமாக திகழ்கிறது. ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் 4 மணி நேரம் இருக்கையில் கட்டிப்போடும் விதத்தில் இயக்கியுள்ளார். உற்சாகமான கதைக்கருத்தை சொல்லும் விதம் பாராட்டதக்க (Dhurandhar 2 Review) விதத்தில் உள்ளது. ஆதித்யா தார் தனது உற்சாகமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். இதை ஒரு மாஸ், வன்முறை, மற்றும் நாட்டுப்பற்று கலந்த படைப்பாக வழங்கியுள்ளார்.
துரந்தர் 2 படத்தின் திரைக்கதை (Dhurandhar 2 Review)
இப்படத்தில் ரன்வீர் சிங் ஜஸ்கிரத் சிங் ராங்கி என்ற இளைஞராகவும் மற்றும் ஹம்சா அலி மஸாரி என்ற பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவனாகவும் (இந்திய உளவாளியாக மாற்றப்பட்டு) நடித்துள்ளார். அவர் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டும் வரும் பயங்கரவாத அமைப்புகளை வீழ்த்துவதற்காக (Dhurandhar 2 Review) பாகிஸ்தான் அனுப்பப்படுகிறார். பின்னர் அவர் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை வீழ்த்துவதற்காக செயல்படும் விதத்தை பின்னணிக் கதையாக ஆதித்யா காட்டியுள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங் ஜஸ்கிரத் சிங் ராங்கி என்ற இளைஞராகவும் மற்றும் ஹம்சா அலி மஸாரி என்ற பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவனாகவும் (இந்திய உளவாளியாக மாற்றப்பட்டு) நடித்துள்ளார். ஆர்.மாதவன் இந்திய உளவுத்துறை (IB) இயக்குநர் அஜய் சன்யால் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் ஒரு உச்சகட்ட நடிகராக உருமாற்றம் பெற்றுள்ளார்
ரன்வீர் சிங் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறார். அவரிடமிருந்து ஒரு ஆக்க்ஷன் சூப்பர்ஹீரோவுக்கு உரிய கம்பீரமும் மற்றும் சண்டைக் காட்சிகளில் திறமையும் வெளிப்பட்டுள்ளது. மேலும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் அவர் மிகச் சிறப்பாக நடித்து ஒரு சிறந்த நடிகருக்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதை காட்டியுள்ளார். வேறு எந்த நடிகரையும் நம்மால் இந்த ரோலில் நினைவுகூர முடியாத விதத்தில் கச்சிதமாக செய்துள்ளார். ஒரு உண்மையான சூப்பர்ஸ்டாரின் எழுச்சியை நம்மால் காணமுடிகிறது.
துரந்தர் 2 பட விமர்சனம்
ரன்வீர் சிங்கின் நடிப்பு திறமை, ஆக்க்ஷன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை சிறந்த பாராட்டுகளை பெற்றுள்ளன. ஆதித்யா தாரின் சிறந்த இயக்கம் ஆனது பார்வையாளர்களை 4 மணி நேரம் இருக்கையில் கட்டிப்போடுகிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் மிகவும் (Dhurandhar 2 Review) விறுவிறுப்பாக உள்ளது. படத்தின் இரண்டாம் பகுதி சற்று மெதுவாக இருக்கிறது. இருந்தபோதும் இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ளது. இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
துரந்தர் 2 திரைப்பட வசூல் சாதனை
இத்திரைப்படம் வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, இத்திரைப்படம் இரவு 9 மணி நிலவரப்படி ரூ.100.54 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.