நீரிழிவு நோய் என அழைக்கப்படும் சர்க்கரை வியாதியை (Diabetes) வெறும் 30 நிமிடத்தில் குணப்படுத்தும் நவீன சிகிச்சை முறையை (Diabetes Cured In 30 Minutes) சீனா மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய உலகில் நீரிழிவு எனும் சர்க்கரை நோயால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மக்கள் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் மாத்திரையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். உலகில் தற்போது வரை சர்க்கரை வியாதியை முழுவதுமாக குணப்படுத்தும் மருந்துகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் வெறும் அரை மணி நேர சிகிச்சையில் முழுவதுமாக நீரிழிவு நோய் (Diabetes) குணமாகிவிடும் என சீனா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் 25 வயது உடைய இளம்பெண் ஒருவர் கடந்த 10 வருடமாக சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் 2 முறை இந்த பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் இவருக்கு சர்க்கரை நோய் பெரிய பிரச்சனையாக இருந்தது. மேலும் இதற்காக அந்த பெண் இன்சுலின் ஊசியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணுக்கு கணைய திசு மாற்று அறுவை சிகிச்சை செய்து நீரிழிவு நோய் முழுவதுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் சீனாவின் மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவில் மட்டும் சுமார் 140 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் ஒவ்வொரு வருடமும் சர்க்கரை நோயால் பாதிக்கும் மக்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயில் இருந்து மக்களை குணப்படுத்துவதற்கு தேவையான சிகிச்சை முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் சீனாவில் தொடங்கப்பட்டது.
கணைய திசு மாற்று அறுவை சிகிச்சை முறை :
இந்த ஆராய்ச்சி முடிவின் ஒரு பகுதியாக தற்போது ‘கணைய திசு மாற்று அறுவை சிகிச்சையின்’ மூலமாக சர்க்கரை நோயை முழுவதும் குணப்படுத்த முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கணைய மாற்று அறுவை சிகிச்சை முறை சீனாவின் பர்ஸ்ட் சென்ட்ரல் மருத்துவமனையும் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
Diabetes Cured In 30 Minutes :
இந்த கணைய திசு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு வெறும் 30 நிமிடம் போதும். இந்த அறுவை சிகிச்சையானது Type 1 Diabetes நோயாளிகளை மட்டும் குணப்படுத்தும் என்றும், சர்க்கரை நோய் குணமாக மாத்திரை மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு தேவை இருக்காது என சீனா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.