நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மற்றும் நீண்ட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை (Diabetes Food Chart in Tamil) வாழ சரியாக சாப்பிடுவது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு பட்டியலை பின்பற்றுவது மிகவும் நல்லது. அதைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு பட்டியல் (Diabetes Food Chart in Tamil)
- ஒரு வாரத்திற்கு 3 முட்டைகள் சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம்.
- மீன் வகைகளை பொரித்து சாப்பிடாமல் குழம்பு வடிவில் சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக சால்மன் மீன்கள் மற்றும் மத்தி மீன்கள் மிகவும் நல்லது.
- கீரை வகைகள் அனைத்தையும் சாப்பிடலாம்.
- நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெண்டைக்காய், பாகற்காய், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், தக்காளி, கேரட் மற்றும் (Diabetes Food Chart in Tamil) வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கலாம். இந்த காய்கறிகளில் கலோரிகள் குறைவான அளவில் உள்ளதாலும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைவான அளவில் உள்ளதாலும் இவை செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
- முழு தானியங்களான பார்லி, ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் தினை வகைகளை (Quinoa) சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
- பருப்பு வகைகள் (சுண்டல், பட்டாணி), டோஃபு மற்றும் சோயா உடலில் புரத அளவை மேம்படுத்தும்.
- நட்ஸ் (பாதாம், வால்நட்ஸ், அக்ரூட் மற்றும் பிற கொட்டைகள்) விதைகள் (சியா) அவகாடோ மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டவை. இவை புரதத்துடன் திருப்திகரமான மொறுமொறுப்பை வழங்குகின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இவை சர்க்கரை நோயாளிகளை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் சிறந்த பலன் அளிக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு நேர இடைவெளிகளில் சிற்றுண்டிகளுக்கான விருப்பத்தை குறைக்கின்றன.
- பழங்களில் கொய்யா, ஆப்பிள் (அளவுடன்), ஆரஞ்சு, மாதுளை, எலுமிச்சை, பேரிக்காய், நெல்லிக்காய், சாத்துக்குடி மற்றும் பெர்ரி வகைகள் (ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி) ஆகியவை நல்லது. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவை (Diabetes Food Chart in Tamil) ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கையான இனிப்புச் சுவை நிரம்பிய பழங்கள் ஆகும். இவை உடலில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் சுவையை அதிகரிக்கின்றன. இவற்றின் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நன்றாக உதவுகிறது.
- ஒரு நாளைக்கு நான்கு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது.
- எண்ணெய் வகைகளில் எள் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஒரு வாரத்திற்கு ஒரு முறை என்ற கட்டுப்பாட்டில் கோழி, மீன் மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் ஆனது வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை ஆகும். இவை பசியைப் பூர்த்தி செய்யும் மற்றும் இயற்கையான இனிப்பை வழங்கும்.
- தேங்காயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTs) உள்ளதால் சமையலில் தேங்காய் (Diabetes Food Chart in Tamil) எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. தேங்காய்த் துருவலை பொரியல்களில் பயன்படுத்தலாம் .
- மேலும் மக்கள் சர்க்கரை அளவைக் கண்காணித்து தங்கள் மருத்துவரிடம் சந்திப்புகளைத் தவறவிடாமல் இருப்பது மிகவும் நல்லது.