Director Nelson Next Plan : அடுத்த படம் குறித்து ஷாக் தகவலை வெளியிட்ட நெல்சன்...
Director Nelson Next Plan :
Director Nelson Next Plan : ‘ஜெயிலர்’ படத்துக்கு கிடைத்த இமாலய வரவேற்பால் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் தனது அடுத்த படம் குறித்து பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘ஜெயிலர்’ படம் யாருக்கு ஓடுகிறதோ இல்லையோ நெல்சனுக்கு வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏற்கனவே நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்துக்காக நெல்சனுக்கு ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. நெல்சன் திலீப்குமார் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படத்திற்காக நிறைய விமர்சிக்கப்பட்டார். அதாவது ‘பீஸ்ட்’ ரிலீஸுக்கு முன்பே ‘ஜெயிலர்’ படத்தை இயக்க நெல்சன் கமிட்டாகி விட்டார். முந்தைய படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், ரஜினியை இயக்கும் வாய்ப்பு நழுவக்கூடும் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த வதந்திகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ‘ஜெயிலர்’ படத்தை இயக்கத் தொடங்கினார் நெல்சன். ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியான ‘ஜெயிலர்’ படம் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. விண்டேஜ் தலைவர் நெல்சன் மறுபிரவேசம் கொடுத்தார். அனிருதின் இசை வெறித்தனம். விநாயகன் மிரட்டல். சிவராஜ்குமார் மாஸ். மோகன்லால் ஸ்மார்ட் என ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். ‘ஜெயிலர்’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது ஒரே வாரத்தில் ரூ.500 கோடி வசூல் செய்யும் அளவுக்கு பிரபலமானது டாப் டக்கர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கிய நெல்சனின் அடுத்த படம் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் சிம்பு அல்லது தனுஷை வைத்து படம் இயக்கலாம் என்ற பேச்சுக்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நேர்காணல் ஒன்றில் பேசிய நெல்சன் திலீப் குமாரிடம், அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கிட்டேன். ஒரு சிறிய இடைவேளை (Director Nelson Next Plan) தேவைப்படுகிறது. ரெஸ்டுக்கு அப்புறம் தான் எதுவாக இருந்தாலும் என்று கூறியுள்ளார். ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெல்சன் இவ்வாறு கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!