Diwali 2025: தீபாவளி பண்டிகையின் வரலாறும் முக்கியத்துவமும்..!
இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆனந்தத்தை ஏற்படுத்தும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். “வாழ்வின் இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்றும் நாள்” என அழைக்கப்படும் இந்தப் பண்டிகை, நமது பண்பாட்டு மரபுகளின் ஒளிவிளக்காக (Diwali 2025) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி, மதம், மொழி, இனம் என மாநிலம் கடந்து எல்லா மக்களையும் மகிழ்ச்சியில் இணைக்கும் திருநாள். தீபாவளி என்பது ‘தீபம்’ (ஒளி) மற்றும் ‘ஆவளி’ (வரிசை) என்பதன் சேர்க்கையாகும். அதாவது, “ஒளிகளின் வரிசை” என்பதே தீபாவளியின் சொற்பொருளாகும். ஆனாலும், இதன் உண்மையான அர்த்தம் நம் வாழ்வின் இருளையும் அறியாமையையும் அகற்றி, நற்பண்பும் அறிவும் ஒளி வீசும் நாளாகும்.
தீபாவளி வரலாறு
தீபாவளி பண்டிகையின் தோற்றம் குறித்து பண்டைய இந்து காவியங்களிலும் புராணங்களிலும் பல்வேறு வடிவங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு மதத்துக்கும், பிரதேசத்துக்கும் தீபாவளி கொண்டாட்டம் குறித்து தனித்தனியான புராணக் கதைகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். நாம் அனைவரும் அறிந்தபடி, இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி எனப் பெரும்பாலானோர் நம்புகின்றனர். வானர தலைவன் இராவணனை அழித்து சீதையை மீட்டு வந்த இராமனை வரவேற்க அயோத்தி நகரம் முழுவதும் மக்கள் எண்ணற்ற தீபங்களை ஏற்றி மகிழ்ந்தனர். அந்த ஒளிவிழாதான் இன்று தீபாவளியாக (Diwali 2025) கொண்டாடப்படுகிறது. மேலும் இது நன்மை தீமையை வென்ற நாள் என்றும், தர்மம் அதர்மத்தை வென்ற நாள் என்றும் புராணங்கள் கூறுகிறது. அதேபோல் நரகாசுரன் என்ற அசுரன் 16,000 பெண்களை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். அவனை அழித்து அந்தப் பெண்களை காப்பாற்றியது பகவான் கிருஷ்ணர் தான். அந்த வெற்றியை கொண்டாடும் நாளாக ‘நரக சதுர்த்தசி’ என்ற பெயரில் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் முக்கியத்துவம் (Diwali 2025)
தீபம் என்பது ஒளி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் அடையாளம். இருளை அகற்றி வெளிச்சத்தை வரவேற்கும் பண்டிகை தீபாவளி என்பதால், இது ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக கருதப்படுகிறது. மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உள்ள இருளையும் (அறியாமை, கோபம், பொறாமை) அகற்றி நல்லெண்ணம், அன்பு, உண்மை மற்றும் தெய்வீக எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகிறது.
தீபாவளி கொண்டாட்ட வழிமுறைகள்
தீபாவளி பண்டிகைக்கு முன் வீடு முழுவதும் சுத்தம் செய்து, புது கோலம், விளக்குகள், தோரணங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்படுகிறது. தீபாவளியன்று காலையில் நரகாசுரன் நினைவாக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகள், கார வகைகள் தயாரித்து பகிர்ந்து கொள்கிறார்கள். இது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. அதேபோல் (Diwali 2025) இந்நாளில், விஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தீபாவளி என்பது குடும்பம், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இணைக்கும் நாள். இது சமூகத்தில் ஒற்றுமை, அன்பு, மரியாதை ஆகியவற்றை வளர்க்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!