Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் (Diwali Bonus) என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB), அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம் (TNCSC), தமிழ்நாடு வளத்துறை (TN FOREST) உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் மற்றும் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி போனஸ் அறிவிப்பு (Diwali Bonus)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படியே இந்த ஆண்டும் சுமார் 2.95 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் அரசு நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சமகா ரூ.8400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி
அதேபோல் தீபாவளிக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பாக மத்திய (Diwali Bonus) அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (Dearness Allowance) 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். தமிழக அரசும் இதே 3 சதவீதம் அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று சதவீதம் அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு நாட்டின் அவ்வப்போது ஏற்படும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுகிறது. மேலும் அகவிலைப்படி உயர்வு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையில் (Diwali Bonus) கணக்கிடப்படுகிறது. இந்த 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதைப் பார்ப்போம். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆக இருந்தால், தற்போது 55% அகவிலப்படி அடிப்படையில் அவருக்கு ரூ.4,950 கிடைக்கிறது. மொத்தமாக அவர் ரூ.13,950 பெறுகிறார். அகவிலைப்படி (Dearness Allowance) 58 சதவீதமாக உயர்ந்தால், அவர் ரூ.5,220 பெறுவார். இதன் மூலம் மொத்தமாக ரூ.14,220 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு ரூ.270 கூடுதலாகப் பெறுவார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!