2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக ‘திரௌபதி 2’ ஆனது 14 ஆம் நூற்றாண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று (Draupathi 2 Review) படமாகும். இதன் முதல் பாகத்தில் விதைக்கப்பட்ட கருத்துகளை இன்னும் தீவிரமாக, இன்னும் நேரடியாக, இன்னும் வெளிப்படையாகச் சொல்லும் ஒரு முயற்சியாக இந்தப்படம் அமைந்துள்ளது. இயக்குநர் மோகன் ஜி தமிழ் பாடப்புத்தகத்தில் கூட இடம்பெறாத தமிழ் மன்னர்களான வீர வல்லாளன் மற்றும் காடவராயர்கள் வீரத்தை இந்தப்படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரான இந்தப்படம் 23.01.2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
வரலாற்று கதாபாத்திரமாக வாழ்ந்தவர்கள் பட்டியல்
மோகன் ஜி இயக்கிய இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷி, ரக்ஷனா இந்து, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலர் வரலாற்று கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா செய்துள்ளார்.
திருவண்ணாமலையை மையமாக வைத்து பின்னப்பட்ட திரைக்கதை
திருவண்ணாமலையை மையமாக வைத்து, வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. தமிழகத்திற்குள் முகலாய பேரரசு ஆட்சி புரிய முடியாததற்கு காரணமாக இருந்த தமிழ் மன்னர்களின் வீரத்தை சொல்லும் கதையாகும். துணிச்சலான தேசபக்தி செய்தியாக தமிழ் மண்ணின் பெருமை உணர்த்தும் கதையாகும். சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள இந்து மக்களை வலுக்கட்டாயமாக (Draupathi 2 Review) மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களுக்கு பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான். 14 ஆம் நூற்றாண்டு தமிழகத்தில் சுல்தானுக்கும் தளபதிக்குமான அரசியல் மோதல்கள் மற்றும் மதமாற்றத்தை மறுத்த மக்களும் அரசர்களும் பட்ட கொடுமைகளை இப்படம் சித்தரிக்கிறது. சுல்தான் மன்னனின் செயல்பாட்டை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்குகிறார்.
இந்தப்படம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம் (Draupathi 2 Review)
தமிழகத்திற்குள் முகலாய பேரரசு ஆட்சி புரிய முடியாததற்கு காரணமாக இருந்த தமிழ் மன்னர்களின் வீரத்தை இந்த படம் சிறப்பாக பதிவு செய்துள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ரிச்சர்ட் ரிஷி (தளபதி/மன்னர் வீர சிம்ம கடவராயன்), ரக்ஷனா இந்துசூடன் (திரௌபதி/கதாநாயகி), நட்டி நடராஜ் (வல்லாள மன்னர்/நட்டி) ஆகியோர் சிறப்பாக பதிவு செய்துள்ளனர். இந்தப்படம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம் என தோன்ற (Draupathi 2 Review) வைக்கிறது. இப்படத்தின் முதல் பாதி போர் அடிக்காத அளவுக்கு டக்குனு முடிஞ்சது போல் இருந்தது. முதல் பாதி படத்தின் சீன்கள் எல்லாம் வேகமாக நகர்ந்தது. லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் எல்லாம் அற்புதமாக உள்ளது.
பார்வையாளர்களின் பொது கருத்துக்கள்
- சில வரலாற்று மற்றும் கற்பனைக் கலவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- வரலாற்று உண்மைகள் மீட்கப்பட்டன.
- சமூக பிரச்சினைகளை தூண்டும்.
- படத்தின் கதை முழுதும் மதம், அரசியல், கலாசார மோதல்களை படத்தின் கருப்பொருளாக முன்வைக்கிறது.
- படத்தின் நீளம் அதிகம்.
- இது தமிழ் சினிமாவில் மத-அரசியல் விவாதத்தைத் தொடங்கும்.
- வசன நிறைந்த காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றன. மதமாற்ற வரலாறு மற்றும் கொடுமைகள் பற்றி சிறப்பாக சித்தரிக்கிறது.