Driverless Metro Train Service Successful : சென்னையில் 3-ம் கட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி
மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் I.A.S சென்னையில் 3-ம் கட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றது (Driverless Metro Train Service Successful) என்றும் இதன் அடுத்த நிலையில் படிப்படியாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெறிவித்துள்ளார்.
இந்த ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் ஆனது போரூர் மற்றும் பூந்தமல்லி இடையே நடைபெற்றது. அதாவது போரூர் முதல் பூந்தமல்லி பணிமனை வரை உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த தேர்வு செய்யப்பட்ட தடத்தில் 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றுள்ளது.
ரூ.1,538 கோடி ஒப்பந்தம் (Driverless Metro Train Service Successful)
அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ரூ.1,538 கோடியில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மொத்தம் 32 பெட்டிகள் கொண்ட 3 ரயில்கள் தயாரிக்கப்படும். இதில் முதல் ரயில் ஆனது 2027-ல் ரெடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் கீழ் காணும் பணிகள் அடங்கும்
● வடிவமைப்பு,
● உற்பத்தி,
● வழங்கல்,
● சோதனை,
● ஆணையிடுதல்,
● பணியாளர்களுக்கான பயிற்சி,
● 15 ஆண்டுகளுக்கு மெட்ரோ ரயில் இயந்திரங்களுக்கு முழுமையான பராமரிப்பு
●ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல்.
முதல் கட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் March 21-ம் தேதி நடைபெற்றது. இதன் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் ஆனது கடந்த April 28-ம் தேதி நடைபெற்றது. இந்த முதல் 2 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்றன. மூன்றாம் கட்ட சோதனையானது Down Line முறையில் நடத்தப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!