Dry Fruits And Nuts Benefits: உலர் பழங்கள் மற்றும் பருப்புகளின் 15 நன்மைகள்
நாம் உண்ணும் உணவு பொருட்களான சிப்ஸ், பரோட்டா, பிரெட், பிஸ்கெட், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கின்ற ஆரோக்கியம் அற்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக உடலுக்கு பல மடங்கு சத்துக்களையும், நன்மைகளையும் தரக்கூடிய உலர் பழங்களையும் (Dry Fruits), விதைகளையும் (Nuts) சாப்பிட்டு வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
பழங்களில் எந்த அளவிற்கு சத்துக்கள் நிறைத்துள்ளதோ அதைவிட அதிக அளவில் உலர் பழங்களில்(Dry Fruits) சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, உலர் அத்திப்பழம், உலர் திராட்சை, பேரிட்சை இதில் ஏதேனும் ஒன்றை தினமும் காலை மற்றும் மதிய உணவு இடைவெளியில் அல்லது மாலை நேர தின்பண்டங்களாகவோ சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். இந்த உலர் பழங்கள் (Dry Fruits) மற்றும் பருப்புகளை (Dry Nuts) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் சிறந்த நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
15 Health Benefits Of Dry Fruits And Nuts
- ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உலர் பருப்புகளும் (Dry Nuts), பழங்களும் (Dry Fruits) திகழ்கின்றன இவற்றில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மேக்னிஷியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரச்சத்து மற்றும் அனைத்து வகையான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அதனால் இவற்றை அடிக்கடி எடுத்து வந்தால் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
- புரதச்சத்து குறைபாடு ஏற்படும்போது முடி உதிர்வு, சரும வறட்சி, தசை பலவீனம், உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் ஏற்படும் பாதம், முந்திரி, பூசணி விதைகள், வேர்க்கடலை போன்றவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புரதச்சத்தை உடலில் அதிகரிக்கச் செய்து தசைகளை வலுப்படுத்தும்.
- பாதம், பூசணி விதைகள், வால்நட் போன்ற உலர் பருப்புகளில் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இந்த அமிலம் இதய நோய் வராமல் தடுக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பாதம் அல்லது வால்நட்டை 4 அல்லது 5 என சாப்பிட்டு வருவது நல்லது.
- அனைத்து உலர் பருப்பு (Dry Nuts) மற்றும் பழங்களிலும் (Dry Fruits) சருமத்தை பாதுகாக்கும் வைட்டமின் இ சத்து நிறைந்துள்ளது. தொடர்ந்து உலர் பருப்புகளை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் கொலாஜல் உற்பத்தியை அதிகரிக்கிறது சரும செல்களை புதுப்பித்து சருமத்தில் சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கும், கருவின் வளர்ச்சிக்கும் சிறந்தது இந்த உலர் பருப்புகள் (Dry Nuts) மற்றும் உலர் பழங்கள் (Dry Fruits) வேர்க்கடலை, பாதம், பேரிட்சை, அத்திப்பழம் போன்றவற்றை கர்பிணிப்பெண்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்க்கும், கருவில் உள்ள குழந்தையின் மூளைவளர்ச்சி, எலும்பு மண்டல ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது.
- பாதம் பேரிட்சை போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால். இதில் நிறைதிருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் கண்பார்வையை தெளிவாக்குகிறது.
- வளரும் குழந்தைகளுக்கு உலர் விதைகள் மிகச்சிறந்தது பாதம், உலர்திராட்சை, பேரிட்சை, வேர்க்கடலை போன்றவற்றை குழந்தைகளுக்கு அளவோடு அடிக்கடி கொடுத்து வந்தால் எலும்பு, பற்கள், நரம்புகள் வலுவடையும். மேலும், மூளை வளர்ச்சி, புத்தி கூர்மை சிறப்பாக இருக்கும்.
- தினமும் உலர் விதைகளை எடுத்துக் கொண்டால் அதில் நிறைந்திருக்கும் பி காம்லக்ஸ் நரம்புகளை வலுப்படுத்தி, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- வேர்க்கடலை, பூசணி விதைகள், பாதம் இவைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் போது இவற்றில் நிறைதிருக்கும் சில இயற்கையான வேதியப் பொருட்களும், அமிலங்களும் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
- பேரிட்சை, உலர் திராட்சை, வேர்க்கடலை போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் இவற்றில் நிறைதிருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து. இரத்த சோகையை குணமாக்குகிறது.
- உடலுக்கு தேவையான நார்ச்சத்தும் உலர் விதைகள் (Dry Nuts) மற்றும் உலர் பழங்களில் (Dry Fruits) நிறைந்துள்ளது. தினமும் கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். தினமும் பேரிட்சை, உலர் அத்திப்பழம், வேர்க்கடலை போன்றவைகளையும் சாப்பிட்டு வருவது நல்லது. இதனால் இவற்றில் நிறைதிருக்கும் நார்ச்சத்து இரைப்பை, குடல் போன்றவற்றின் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கிறது.
- புற்றுநோய்க்கு எதிரான சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட் குணங்களும் இந்த உணவுகளில் நிறைந்துள்ளதால் வயிறு, நுரையீரல், மார்பகம், குடல் தொடர்பான புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
- வால்நட்டில் புரதம் அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளது. இதனால் இந்த பருப்பை சிறு பிள்ளைகள் முதல் பெரிய வயதினர் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு வால்நட் சாப்பிடுவது நல்லது.
- பிஸ்தா பருப்பில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இது உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். சருமத்தை பொலிவுடன் வைக்கும், முடியை வலிமையாக்கும். அதிக கொழுப்பு சத்து இருக்கிற இந்த பிஸ்தா பருப்பு உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். உடல் எடை பிரட்சனை இருப்பவர்கள் பிஸ்தா பருப்பை குறைவாக சாப்பிட வேண்டும். இதில் கொழுப்பு சத்து இருப்பதால் 60 வயதிற்கு அதிகமானோர் இந்த பிஸ்தா பருப்பை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் ஒருநாளைக்கு 3 அல்லது 4 பிஸ்தா பருப்பை சாப்பிடலாம்.








