Dude Movie Review: பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டியூட்' படத்தின் திரை விமர்சனம்..!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சத்யா, ரோகிணி, டிராவிட் செல்வம் ஆகியோர் நடித்துள்ள படம் டியூட். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லவ் டுடே, டிராகன் என நாயகனாக அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி (Dude Movie Review) ரேஸில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இந்த விமர்சன தொகுப்பில் பார்க்கலாம்.
டியூட் விமர்சனம் (Dude Movie Review)
டியூட், ஒரு ரொமாண்டிக் – காமெடி கலந்த படம். முதல் பாதி ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாம் பாதி மந்தமாக இருக்கிறது. வழக்கமான காதல் கதை படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளது. படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆனாலும் இடைவேளைக்கு முன் 20 நிமிடம் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்குடன் முடிகிறது. படத்தின் இரண்டாம் பாதி நன்றாக தொடங்கினாலும் கதை உடனடியாக படுத்துவிட்டது, அதன்பிறகு எழவே இல்லை. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் நல்ல ஆற்றலுடன் படத்தை உருவாக்கி இருந்தாலும் திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லை.
அனைவரும் எதிர்பார்த்தபடியே பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சரத்குமாருக்கு நேர்த்தியான வேடம், அதில் அவர் மிளிர்கிறார். சாய் அபயங்கரின் இசை, படத்தை தூக்கி நிறுத்துகிறது. படத்தின் எடிட்டிங் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆன சில மொமண்டுகள் இருந்தாலும், எமோஷனல் கனெக்ட் இல்லை, காமெடியால் படம் நகர்கிறது. ஒருமுறை பார்க்கலாம் என படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இன்னொரு ரசிகர், ‘டியூட் படத்தை ஒருமுறை பார்க்கலாம். இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் க்ரிஞ்சாக இருக்கிறது’ என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல், இன்னொருவருவர் டியூட் படம் ஆரம்பித்த விதமும் சரத்குமார் (Dude Movie Review) என்ட்ரி கொடுத்த விதமும் பார்க்கும் போது ப்ளாக்பஸ்டர்தான். இரண்டாம் பாதியில் இயக்குநர் ரிஸ்க்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், மொத்தத்தில் டியூட் தீபாவளி வின்னர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!