Gistak Media

Dude Trailer: பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை (Dude Trailer) பெற்று வருகிறது. இந்த நிலையில் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, நட்டி நடராஜின் ‘கம்பி கட்ன கதை’ உள்ளிட்ட படங்களுக்கு போட்டியாக டியூட் களமிறங்குகிறது. 

அதேபோல் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படம் டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிப்போனது. மேலும் இந்த ஆண்டு பிரதீப் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டியூட் படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே தீபாவளி பிளாக்பஸ்டர் இந்த படம் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் தமிழ் படம் டியூட் தான்.

டியூட் ட்ரெய்லர் (Dude Trailer)

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டிரகான் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த ரெடியாகி விட்டார் பிரதீப் ரங்கநாதன். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மட்டும் இளம் வயதில் இருந்திருந்தால் அவரை தான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பேன் என்று கூறிய கீர்த்தீஸ்வரன் இளமை துள்ளல் உடன் டியூட் படத்தை (Dude Trailer) இயக்கியுள்ளார். ட்ரெய்லர் முழுவதும் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களை போல வைபாக எடிட் செய்துள்ள எடிட்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜு ஜி.வி.பிரகாஷின் இயக்கத்தில் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவிட்டாலும் ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. தளபதி விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, விஷ்ணு விஷால் உடன் ‘இரண்டு வானம்’ என பல படங்களில் பிஸியாக நடித்து வரும் மமிதா பைஜு டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மாமா பொண்ணாக நடித்துள்ளார்.

Dude Trailer - Gistakmedia

தாலிக்கு எந்த மரியாதையும் இல்லை

டியூட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் தாலியுடன் நிற்கும் போஸ்டர் தான் வெளியானது. இந்நிலையில், ட்ரெய்லரிலும் தாலி டயலாக் இடம்பெற்றுள்ளது. ட்ரெய்லரில், என்ன இருந்தாலும் தாலிக்கு ஒரு மரியாதை இல்லையா? என சரத்குமார் கேட்க, ‘தாலிக்கு மரியாதை இல்லை, அதுக்கு பின்னாடி இருக்கும் பெண்ணொட உணர்வுகளுக்குத்தான் மரியாதை’ என்ற பஞ்ச் பேசி ஸ்கோர் செய்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் ஸ்டைலில், ஃப்ரன்ட்ல வச்ச கால பேக்ல (Dude Trailer) வைக்க மாட்டேன் என்ற பஞ்ச் டயலாக் பேசியுள்ளார். மேலும் டியூட் ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் இந்த தீபாவளி டியூட் தீபாவளி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top