EB SMS Bill Reminder : EB Bill கட்டாவிட்டால் Fuse Carrier-யரை பிடுங்கும் நிலையில் மாற்றம்
தமிழ்நாடு மின்சாரம் வாரியத்தின் ஊழியர்கள், வழக்கமாக பயனர்கள் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளில் விதிக்கப்பட்ட நேரத்தில் மின்சார கட்டணம் கட்டத் தவறினால் வீட்டில் மின் இணைப்பை துண்டிப்பார்கள். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தும் தேதி வருவதால் பயனர்களால் மற்ற கட்டணங்களை செலுத்துவது போல் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆனது எளிதாக நினைவில் வைத்து கொள்ள இயலாமல் போகிறது. இதனால் தமிழ்நாடு மின்சாரம் வாரியத்தின் ஊழியர்கள் வழக்கமாக ப்யூஸ் கேரியரை பிடுங்கும் நிலை ஏற்படுகிறது. பயனர்கள் இதனால் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அசௌகரியம் ஏற்படுகிறது. இந்த பயனர்களின் அசௌகரியத்தை தடுக்க TANGEDCO இப்போது நல்ல செய்தி வெளியிட்டுள்ளது.
EB SMS Bill Reminder - EB Bill கட்டாவிட்டால் 3 நாட்களுக்கு முன்பே SMS :
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி 3 நாட்களுக்கு முன்பே SMS மூலம் நினைவூட்டும் திட்டத்தை (EB SMS Bill Reminder) அமுல்படுத்த உள்ளது. இனி EB Bill கட்டாவிட்டால் ப்யூஸ் கேரியரை பிடுங்கும் நிலை ஏற்படாது.
தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், “தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது இப்போது குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தி தாமதக் கட்டணத்தை தவிர்க்கவும் என்ற நினைவூட்டல் குறுஞ்செய்தியை (EB SMS Bill Reminder) கடைசி 3 நாட்களுக்கு முன்னதாக #UPI இணைப்புடன் பயனர்களுக்கு அனுப்பும். மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தற்போது மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
பயனர்கள் மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. பயனர்கள் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இல்லை. ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் தரப்பட்டுள்ள User name, Password பயன்படுத்தி இணையதளம் மூலம் செலுத்தலாம்”. இனி தமிழ்நாடு மின்சாரம் வாரியம் ஒவ்வொரு மின் பயனர்களுக்கும் மின் கட்டணம் செலுத்த விதிக்கப்பட்ட கடைசி நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு SMS மூலம் (EB SMS Bill Reminder) நினைவூட்டும். மேலும் UPI லிங்கும் தரப்பட்டும். எனவே எந்த இடையூறும் இல்லாமல் பயனர்ள் சரியான நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!