Education Ministry Launches 5 AI Courses : மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்களுக்கு 5 இலவச AI படிப்புகளை தொடங்குகிறது
வருங்கால உலகை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்த கல்வியை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஸ்வயம்’ என்ற இணையதளத்தில் 5 விதமான ஏஐ கல்வியை மத்திய அரசு (Education Ministry Launches 5 AI Courses) இணைத்துள்ளது. மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு கல்வியானது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும் உதவும் என்றும், இதன் அனைத்து உள்ளடக்கங்களும் நிபுணத்துவம் பெற்ற IIT பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பைத்தான் நிரலியை பயன்படுத்தி ஏஐ, எம்எல், கிரிக்கெட் பகுப்பாய்வு செய்வது, வேதியியல், இயற்பியல், கணக்குப்பதிவியல் என 5 தலைப்புகளில் AI பாடங்கள் கற்பிக்ககற்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைத்தான் நிரலியை பயன்படுத்தி AI/ML
இந்த பைத்தான் AI நிரலி நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு காட்சிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் அடிப்படைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்தப் பாடம் 36 மணி நேரம் இயங்கும் என்றும், இறுதியாக சான்றிதழ் மதிப்பீட்டை உள்ளடக்கி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியலில் செயற்கை நுண்ணறிவு
உலக வேதியியல் தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தான் மூலக்கூறு பண்புகள், மருந்துகளை வடிவமைத்தல் மற்றும் மாதிரி எதிர்வினைகள் போன்ற கற்றலின் (Education Ministry Launches 5 AI Courses) அடிப்படைகள் குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. மேலும் IIT மெட்ராஸால் வழங்கப்படும் இது 45 மணி நேரம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பகுப்பாய்வு AI (Education Ministry Launches 5 AI Courses)
IIT மெட்ராஸ் பேராசிரியர்களால் வழங்கப்படும் இந்த கிரிக்கெட் பகுப்பாய்வு செயற்கை நுண்ணறிவானது, கிரிக்கெட்டை முதன்மை உதாரணமாகக் கொண்டு, பைத்தான் நிரலியை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டு பகுப்பாய்வின் அடிப்படைகளை மாணவர்களுக்கு கற்பிக்கிறது.
கணக்கியலில் செயற்கை நுண்ணறிவு
வணிகம் மற்றும் மேலாண்மை துறை மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு திட்டம், எதிர்காலத்தில் கணக்கியலில் AI எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை மாணவர்களுக்கு விளக்குகிறது. மேலும் 45 மணி இயங்கும் என்றும், சான்றிதழ் மதிப்பீட்டுடன் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் செயற்கை நுண்ணறிவு
உலக இயற்பியலில் இயந்திர கற்றல், நடைமுறை எடுத்துக்காட்டுகள் மற்றும் நரம்பியல் சிக்கல்களை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை மாணவர்களுக்கு கற்பிக்கும் 45 மணிநேர பாடமாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!