Electricity Tariff Hike In TN : தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
மின் கட்டணத்தை ஜூலை 1 முதல் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு :
- தமிழ்நாட்டில் விலையில்லா மின்சாரம் ஆனது 100 யூனிட் வரை அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்.
- அதைப்போல இலவச மின்சாரம் ஆனது குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். கைத்தறி, விவசாயம், குடிசை, விசைத்தறி, தாழ்வழுத்த தொழிற்சாலைகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் ஆனது தொடர்ந்து வழங்கப்படும்.
Electricity Tariff Hike In TN - தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு விளக்கம் :
- மின் கட்டணம் 10 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
- மின் கட்டணம் 30 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தும் 35 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
- மின் கட்டணம் 50 ரூபாய் உயர்வு – 400 யூனிட் வரை பயன்படுத்தும் 25 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
- மின் கட்டணம் 80 ரூபாய் உயர்வு – 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 13 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
- மின் கட்டணம் 30 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோருக்கு.
- மின் கட்டணம் 40 பைசா உயர்வு – உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு உயர்வு.
- மின் கட்டணம் 35 பைசா உயர்வு – உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு.
- மின் கட்டணம் 20 பைசா உயர்வு – விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம். 1001 முதல் 1500 யூனிட் வரை மின் கட்டணம் 20 பைசா உயர்வை பெறும். 1500 யூனிட்டிற்கு மேல் மின் கட்டணம் 25 பைசா உயர்வை பெறும்.
- சிறு, குறு தொழில் மின் நுகர்வோருக்கு யூனிட்டிற்கு மின் கட்டணம் உயர்வு 20 பைசா ஆகும்.
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்:
மின் கட்டண உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விளக்கத்தில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு 2011-12 ஆம் ஆண்டில் 18,954 கோடி ரூபாயாக இருந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 1,13,266 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு, 10 ஆண்டுகளில் 94,312 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. இதனால் நிதி இழப்பை ஈடுகட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. கடன் தொகை 2011-12 ஆம் ஆண்டில் 43,493 கோடி ரூபாயாக இருந்தது, 10 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்து 1,59,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக அரசு நிதி இழப்பை ஈடுகட்ட ஆண்டுதோறும் சிறிய அளவில் மின் கட்டணம் அதிகரித்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!