ESIC Recruitment 2023 : லேப் டெக்னீஷியன், பார்மசிஸ்ட் முடித்தவரா? உங்களுக்கு மத்திய அரசுவேலை
ESIC Recruitment 2023 :
மத்திய அரசின் இ.எஸ்.ஐ.சி, அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (ESIC Recruitment 2023) பாரா மெடிக்கல் முடித்த சுமார் ஆயிரம் பேரை பணிக்கு தேர்வு செய்ய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான சம்பளம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரம் வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருக்கும் தொழிலாளர் காப்பீட்டு கழகத்திற்கு 161 மருத்துவமனைகள், 1574 மருந்தகங்கள் உள்ளன. இங்குள்ள துணை மருத்துவப் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழக மண்டல அளவில் ஈ.சி.ஜி, டெக்னீஷியன், ஜூனியர் ரேடியோகிராபர், ரேடியோகிராபர், ஜூனியர் லேப் டெக்னீஷியன், ஓ.டி, அசிஸ்டன்ட், அலோபதி பார்மசிஸ்ட், ஆயுர்வேதா பார்மசிஸ்ட் என 7 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ESIC Recruitment 2023 - தகுதி :
தகுதி :
- சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். ஓ.டி. அசிஸ்டன்ட் ஓராண்டு காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓ.டி. அசிஸ்டன்ட் மற்றும் பார்மசிஸ்ட் பணியிடம் தவிர மற்ற பணியிடங்களுக்கு வயது வரம்பானது 18-25 க்குள் இருக்க வேண்டும். ஜாதி ரீதியாக தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.டி. அசிஸ்டன்ட் மற்றும் பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் :
- தமிழகத்திற்கு மட்டும் மொத்தம் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ESIC Recruitment 2023 - விண்ணப்பிக்கும்முறை :
விண்ணப்பிக்கும் முறை :
- ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கையெழுத்து, இடது பெருவிரல் ரேகை, கையால் எழுதப்பட்ட உறுதி ஆவணம் ஆகியவற்றை ஸ்கேன் செய்துகொள்ளவேண்டும்.
- பிறகு இஎஸ்ஐசி இணையதளமான www.esic.gov.in சென்றால், முகப்பு பக்கத்தில், பாரா மெடிக்கல் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் என்ற செய்தி ஓடும். அதனை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் :
- இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500. பெண்கள், எஸ்.சி, எஸ்.டி.யினருக்கு ரூ.250. அந்த கட்டணமும் தேர்வுக்கு வந்தால் திரும்ப உங்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC Recruitment 2023 - தேர்வு செய்யும் முறை :
தேர்வு செய்யும் முறை :
- முதலில் 150 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
- துறை சார்ந்த அறிவைச் சோதிக்க 50 கேள்விகள். கேள்வி ஒன்றுக்கு தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்ககளுக்கு தேர்வு நடைபெறும்.
- பொது அறிவைச் சோதிக்க 10 கேள்விகள் 10 மதிப்பெண்கள்.
- திறனறிய 20 கேள்விகள் 20 மதிப்பெண்கள்.
- கணித அறிவு சோதிக்க 20 கேள்விகள் 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
- தவறான 1 பதில்களுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.
தேர்ச்சிக்கான மதிப்பெண் :
- பொதுப் பிரிவினர்க்கு குறைந்தபட்சம் 45%, ஓ.பி.சி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 40%, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் 35%, மாற்றுத்திறனாளிகள் 30% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- அக்டோபர் 30 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்களுக்கு :
- www.esic.gov.in/attachments/recruitmentfile/543e9b1615723a9abc462db9e99bf795
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!