இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1, 2026 முதல் ரொக்கப் பணப் பயன்பாடு (Cashless) முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, FASTag (FASTag Cashless Toll Booth Rule)அல்லது UPI மூலம் டிஜிட்டல் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இணைந்து 100% டிஜிட்டல் முறையை சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தியுள்ளன. இந்த 100% டிஜிட்டல் கட்டண முறையானது இந்தியாவின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் சிறந்த முயற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது
சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி
சுங்கச்சாவடிகளில் நிலவி வந்த நீண்ட வரிசை பிரச்சனைகளையும், மற்றும் பணப் பரிவர்த்தனை செய்வதில் உள்ள சிக்கல்களையும் தவிர்க்க 100% டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு மாற்றாக, டிஜிட்டல் முறையிலான கட்டணங்கள் மட்டுமே சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
சுங்கச்சாவடி ஊழியர்கள் கீழ் வரும் கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வார்கள்.
- FASTag முறை (FASTag Cashless Toll Booth Rule) – வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படுகின்ற இந்த FASTag மின்னணு குறிச்சொல் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த FASTag மின்னணு குறிச்சொல் மூலம் தானாகவே வாகன கட்டணம் கழிக்கப்படும்.
- UPI (Unified Payments Interface) முறை – FASTag மின்னணு குறிச்சொல் வேலை செய்யாதபோது அல்லது வாகன ஓட்டிகளிடம் FASTag பேலன்ஸ் இல்லாதபோது,சுங்கச்சாவடியில் உள்ள QR குறியீட்டை வாகன ஓட்டிகள் ஸ்கேன் செய்து GPay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம் வாகன கட்டணத்தை செலுத்தலாம்.
சுங்கச்சாவடிகளில் புதிய அபராத விதிகள் மற்றும் 72 மணி நேர விதி
டிஜிட்டல் முறைக்கு மாறாத வாகன ஓட்டிகளுக்குக் சுங்கச்சாவடிகளில் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
● FASTag இல்லாமல் பயணித்தால் இரட்டிப்பு கட்டணம்
வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் FASTag இல்லாமலோ அல்லது அதில் போதிய பணம் இல்லாமலோ சுங்கச்சாவடிக்குள் நுழைந்தால், அசல் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு தொகையை அபராதமாக சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டும். சில சுங்கச்சாவடிகளில் இது 1.25 மடங்காக வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
● 72 மணி நேர e-notice விதி
மின்னணு நோட்டீஸ் (e-notice) ஆனது கட்டணம் வசூலிக்கப்படாத வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும். அத்தகைய வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் அசல் கட்டணத்தை முறையாக செலுத்திவிட வேண்டும். அப்படி அவர்கள் தவறினால் அந்த கட்டண தொகையானது இரட்டிப்பாகும்.
● தவறான நோட்டீஸ் பெற்றால் மேல்முறையீடு செய்யலாம்
வாகன உரிமையாளர்கள் தவறான நோட்டீஸ் பெற்றால், 72 மணி நேரத்திற்குள் ஆன்லைன் போர்ட்டலில் தவறான நோட்டீஸ் குறித்து புகார் அளிக்கலாம். தவறான நோட்டீஸ் குறித்து 5 நாட்களுக்குள் சுங்க நிறுவனம் முறையான பதில் அளிக்காவிட்டால் அந்த நோட்டீஸ் ஆனது ரத்து செய்யப்படும்.
● FASTag Cashless Toll Booth Rule - கட்டணம் செலுத்த 15 நாள் கெடு மற்றும் வாகனத் தடை
வாகன உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் கட்டணம் செலுத்த தவறினால், அந்த வாகனம் குறித்த தகவல்கள் ‘வாஹன்’ (VAHAN) இணையதளத்தில் பதிவேற்றப்படும். இதனால் வாகன உரிமையாளர்கள் காப்பீடு புதுப்பித்தல், தகுதிச் சான்றிதழ் (FC) பெறுவது போன்ற சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.