Ferry Service Between Nagai and Sri Lanka : தமிழத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை
Ferry Service Between Nagai and Sri Lanka :
நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2024 புத்தாண்டு பிறந்ததில் இருந்தே எப்போது நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை தொடங்கும் (Ferry Service Between Nagai and Sri Lanka) என பயணிகளும் மற்றும் வியாபாரிகளும் எதிர்பார்த்திருந்தனர். தற்போது மீண்டும் நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை குறித்த தகவல்கள் ஆனது வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை பயணிகள் கப்பல் சேவை ஆனது மீண்டும் இயக்கப்படும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ferry Service Between Nagai and Sri Lanka) தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் தொடங்கப்படவுள்ள இந்த சேவையில் (Ferry Service Between Nagai and Sri Lanka) சிவகங்கை என்ற கப்பலே சேவையை தொடங்கும் என்றும் செரியாபாணி கப்பல் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவு ஆனது இந்த பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புதுப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 150 பயணிகள் இந்த சிவகங்கை கப்பலில் பயணம் செய்ய முடியும் எனவும் ஒரு பயணி 60 கிலோ எடை வரை கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிவகங்கை கப்பல் இலங்கை காங்கேசன்துறையை 3 மணி நேரத்தில் சென்றடையும். மேலும் இந்த சிவகங்கை கப்பல் சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு இந்திய ரூபாயில் 6 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை செல்ல ஒரு வழிப் பயணத்துக்கு 6,500 ரூபாயுடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு 7,670 ரூபாய் கட்டணம் ஆனது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயில் 26 ஆயிரம் ஒரு வழிப் பயணத்துக்கு என கூறப்படுகிறது.
நாகையிலிருந்து இயக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் பயணிகள் கப்பல் முன்பு தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் புதிதாக ஒரு கப்பல் சேவை ஆனது துவங்கப்பட்டிருப்பது இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு நல்லுணர்வைப் பேணும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரூ.3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் இதற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அனைவரும் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பயணத்துக்கு (Ferry Service Between Nagai and Sri Lanka) பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Ra-Next Real Estate : ரியல் எஸ்டேட் டிஜிட்டல் கட்டமைப்பு தர முகமையாக ராநெக்ஸ்ட்.. அங்கீகாரம் வழங்கியது டிராய்
-
Weight Loss Tips in Tamil : இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் 10 எளிய வழிகள்?
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!