Gistak Media

Fide Women's Chess World Cup Final 2025 : ஃபிடே மகளிர் உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன்

2025 மகளிர் உலக கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் 38 வயதான கோனேரு ஹம்பியை (Fide Women’s Chess World Cup Final 2025) வீழ்த்தி, 19 வயதான திவ்யா தேஷ்முக் சாம்பியன் வென்றுள்ளார்.

மகளிர் உலக கோப்பை செஸ் தொடர்

கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஜார்ஜியாவில் பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரலாற்றில் முதல்முறையாக இந்திய வீராங்கனைகளான கோனேரு ஹம்பியும், சர்வதேச மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். மேலும் மகளிர் செஸ் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது, இந்திய ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை (Fide Women’s Chess World Cup Final 2025) ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 2 வது ரேபிட் டை-பிரேக்கர் ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பியை, 19 வயதான திவ்யா தேஷ்முக் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Fide Women's Chess World Cup Final 2025 - Gistakmedia

ரேபிட் டை-பிரேக்கர் ஆட்டம் (Fide Women's Chess World Cup Final 2025)

ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற கிளாசிக்கல் சதுரங்க போட்டியின் இறுதி ஆட்டம் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலாவது டை-பிரேக்கரில் கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் டிரா செய்தனர். பின்னர் நடைபெற்ற 2 வது போட்டியில் கடைசி நேரத்தில் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஃபிடே மகளிர் உலக சதுரங்க (Fide Women’s Chess World Cup Final 2025) கோப்பையை வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையையும் திவ்யா தேஷ்முக் படைத்துள்ளார்.

திவ்யா தேஷ்முக்

திவ்யா தேஷ்முக், டிசம்பர் 9 2005-ல் நாக்பூரில் மருத்துவ பெற்றோர்களுக்கு மகளாக பிறந்தார். அவரின் மூத்த சகோதரி பூப்பந்து விளையாடியதை பார்த்ததில் இருந்து, இவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. மேலும் இவர் விளையாட்டின் ஆர்வத்தை சதுரங்கம் மீது செலுத்த தொடங்கினார். இதற்காக சென்னையை சேர்ந்த ரமேஷிடம் பயிற்சி பெற்றார். 5 வயதில் தொடங்கிய இவரின் சதுரங்க பயணத்தில், முதல் முறையாக 2012-ம் ஆண்டு 7 வயதுக்குட்பட்டோர் (Fide Women’s Chess World Cup Final 2025) தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். இதை தொடர்ந்து 2014-ல் U-10 பிரிவுகளில் பட்டம் வென்றார். மேலும் 2021-ம் ஆண்டு அவர் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தை வென்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top