பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் தங்கள் உடல் மட்டுமல்லாமல் தங்களது உணவுப் பழக்க வழங்கங்கள், மனநிலை மற்றும் வாழ்க்கை முறை என (Foods to Avoid During Pregnancy) அனைத்திலும் முறையான கவனத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம் ஆகும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சாதாரண Food Poisoning கூட கர்ப்பத்தில் வளரும் கருவுக்கு ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என்பதால் தவிர்க்க வேண்டிய உணவுகள் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை.
பாஸ்டரைஸ் செய்யாத பால்
பாஸ்டரைஸ் செய்யாத பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பாஸ்டரைஸ் செய்யாத பாலில் உள்ள Listeria Monocytogenes என்ற கிருமி ஆனது கருச்சிதைவு, Stillbirth, Low Birth Weight மற்றும் Neonatal infection ஏற்படுத்தும்.
பச்சை முட்டை
பச்சை முட்டையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். முட்டையில் Salmonella Bacteria இருக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு (Foods to Avoid During Pregnancy) கடுமையான வாந்தி, பேதி, நீரிழப்பு (Dehydration) மற்றும் கருவுக்கு ஆக்சிஜன் குறைபாடு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
காபி, மற்றும் டீ
காபி, மற்றும் டீ போன்றவற்றில் காஃபின் உள்ளது. அதிக அளவில் காஃபின் உட்கொள்ளவதால் கருச்சிதைவு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பு போன்ற விளைவுகள் (Foods to Avoid During Pregnancy) ஏற்படும். அதனால் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளுக்கு 200mg-க்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது.
சரியாக வேகவைக்கப்படாத இறைச்சிகள்
சரியாக வேகவைக்கப்படாத இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் Salmonella, Listeria, Toxoplasma போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இவை கருவின் மூளை வளர்ச்சி பாதிப்பு, கருச்சிதைவு (Miscarriage), முன் காலப் பிரசவம் மற்றும் குழந்தைக்கு பிறவி (Foods to Avoid During Pregnancy) நோய்களை ஏற்படுத்தும். மேலும் Toxoplasmosis எனப்படும் தொற்று
கண் பார்வை இழப்பு மற்றும் மன வளர்ச்சி தாமதம் போன்ற தீவிர விளைவுகளையும் ஏற்படுத்தும்.
சர்க்கரை/உப்பு அதிகம் கொண்ட உணவுகள்
சர்க்கரை/உப்பு அதிகம் கொண்ட சிப்ஸ், குக்கீகள், பேஸ்ட்ரிகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை உடல் பருமன் மற்றும் நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தும் ஊட்டச்சத்து குறைவான உணவுகள் ஆகும். அதனால் கர்ப்பிணி பெண்கள் இவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு மெர்குரி (பாதரசம்) உள்ள மீன் வகைகள்
அதிக அளவு மெர்குரி (பாதரசம்) உள்ள ஷார்க், ஸ்வோர்ட்ஃபிஷ், கிங் மாக்கரல் போன்ற மீன் வகைகள் கருவின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் அவற்றை உட்கொள்வதை தவிர்த்து மெர்குரி குறைந்த அளவு உள்ள (Foods to Avoid During Pregnancy) மீன்களான சங்கரா, நெத்திலி, சர்டின், சால்மன் ஆகியவற்றை வாரத்திற்கு 2-3 முறை உண்ணலாம். அவை சிறந்த ஒமேகா-3 கொழுப்புக்களை வழங்கும்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்னும் நொதி கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதால் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுகள்
அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுகள் எல்லாம் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அன்னாசி மற்றும் திராட்சை பழங்கள்
அன்னாசி மற்றும் திராட்சை பழங்களில் உள்ள புரோமெலைன் என்னும் நொதி கருச்சிதைவை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பழைய மிஞ்சிய உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நைட்ரேட் ஆனது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பழைய மிஞ்சிய உணவுகள் பாக்டீரியா வளர்ச்சிக்கு இடமளிக்கும். அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.