Free IAS Coaching Apply : மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களே மிஸ் பண்ணிடாதீங்க…
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து (Free IAS Coaching Apply) கொண்டு வெற்றி பெற இலவச பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இது ஒரு அருமையான வாய்ப்பு. அதனால் மீனவ சமுதாய இளைஞா்களே மிஸ் பண்ணிடாதீங்க.
ஐ ஏ எஸ் இலவசப் பயிற்சி - ஒரு குறிப்பு
மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பு ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக் குழுவாக அமைத்து அவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சியை அளிக்கின்றன.
ஐ ஏ எஸ் இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தேவைப்படும் தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள் (Free IAS Coaching Apply)
மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர் – 35,
ஆதிதிராவிடர்,மற்றும் பழங்குடியினர் – 37,
ஊனமுற்றவர் – 42.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பு 12-ம் வகுப்பில் 1000-க்கு மேல் ( 80%) மதிப்பெண்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள் பெற்ற பின் தற்போது வேறு பணிகளில் பணிபுரிந்து வந்தாலும் அவர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர்வதற்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இலவசப் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை இயக்குநர்கள் (Free IAS Coaching Apply) மற்றும் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்தும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25.11.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!