தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த மாதம் தொடங்க உள்ளது. இது தமிழக அரசின் ஒரு மெகா திட்டம் ஆகும். இந்த பிப்ரவரி 2026 இறுதிக்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை விநியோகம் செய்து முடிக்க தமிழக அரசு (Free Laptop Scheme) திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு மாணவர்களின் டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலை அதிகரித்து, கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஆனது Intel i3 ப்ரோசெசர், 8GB RAM மற்றும் AI-enabled software கொண்ட லேப்டாப்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும். இந்த திட்டத்தை தமிழக அரசு நாளை (ஜனவரி 5, 2026) முதல் செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-ல் அறிவிக்கப்பட்ட திட்டம்
இந்த திட்டம் கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் மற்றும் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் நல்ல பலன் அளிக்கும் திட்டம் ஆகும். அவர்கள் வளர்ச்சி பெற மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் திட்டம் ஆகும். தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-ல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு ஆனது 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.2000 கோடி ஒதுக்கீட்டுடன் இத்திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின்படி, நடப்பு 2025 – 2026 கல்வி ஆண்டில் (Free Laptop Scheme) இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு இது ஒரு புத்தாண்டு பரிசு (Free Laptop Scheme)
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் புத்தாண்டு விடுமுறையை முடித்து கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் திரும்பியவுடன் ஒரு புத்தாண்டு பரிசாக இந்த மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியை பெறும் வகையில் இலவச Perplexity Pro AI வசதி இந்த மடிக்கணினியுடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மாணவர்கள் 6 மாதக் காலம் கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலவச Perplexity Pro AI வசதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
AIADMK அரசின் திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட திட்டம்
தமிழ்நாட்டில் முதன் முறையாக 2011-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை AIADMK அரசு செயல்படுத்தியது. இந்த திட்டம் கொரானா காலத்தில் தற்காலிகமாக (Free Laptop Scheme) நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்டம் மீண்டும் செயல் படுத்தப் படுகிறது.
தங்களுக்கும் லேப்டாப் கிடைக்குமா?
பொருளாதார நெருக்கடியில் கல்வி பயிலும் அரசு கல்லூரி மாணவர்களின் தங்களுக்கும் லேப்டாப் கிடைக்குமா என்ற ஆதங்கத்தை இந்த மடிக்கணினி திட்டம் தீர்க்கும். இந்த திட்டம் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமையை வழங்கும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். ERP அமைப்பு மூலம் இந்த பயனாளிகள் கண்காணிக்கப்படுவார்கள்.