Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கொலை வழக்கு தொடர்பாக இந்திய சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் எடுக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ராஷி கண்ணா இந்தி திரை உலகில் அறிமுகமான மெட்ராஸ் கஃபே உள்ளிட்ட பல படங்கள் அவரது கொலை வழக்கை சுற்றி படமாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ராஜீவ் காந்தி அவர் கொலை செய்யப்பட்ட பிறகு, அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும் படமாக ஃப்ரீடம் (Freedom Review) படத்தை இயக்குநர் சத்யசிவா உருவாக்கியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி
இந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து ப்ரீடம் படத்திலும் ஈழத் தமிழராகவே சசிகுமார் நடித்துள்ளார். ஈழத் தமிழர்கள் சந்திக்கும் (Freedom Review) பிரச்சனையை ஏகப்பட்ட காமெடி காட்சிகளுடன் ரத்தமும் சதையுமாக அவர்களது வலியையும் வேதனையும் காட்டியிருக்கும் படமாகவே ப்ரீடம் படம் உருவாகி இருக்கிறது.
ஃப்ரீடம் படத்தின் கதை (Freedom Review)
பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிவராஜன் மற்றும் சுபா ஆகியோர் இதற்கு முக்கிய காரணம் என காவல்துறையால் தேடப்படுகின்றனர். இந்த சமயத்தில் ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை, வேலூர் மத்திய சிறைக்கு மாற்றி விசாரணை என்ற பெயரில் காவல்துறை அடித்து துன்புறுத்தி (Freedom Review) சித்ரவதை செய்கின்றனர். இந்த கொடுமையை தாங்க முடியாமல் தப்பிக்க சிறையில் ரகசியமாக Underground-ல் பள்ளம் தோண்டி 43 பேர் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த 43 பேரின் நிலை என்ன ஆனது என்ற உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஃப்ரீடம் படம் உருவாகியிருக்கிறது.
சசிகுமார் மிரட்டல் நடிப்பு
நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து வரிசையாக நல்ல கதைகளாக தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் சசிகுமார் இந்த படத்தில் இலங்கை அகதியாக நடித்துள்ள விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. படத்தில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து (Freedom Review) சித்ரவதை செய்யும் காட்சிகளில் சசிகுமார் தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார். மேலும் 4 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கேயே இருந்தால் இப்படியே சாக வேண்டியது தான் என பிரிசன் பிரேக் செய்து தப்பிக்க நினைக்கும் இடங்களிலும் எப்படியாவது ஃப்ரீடம் பெற வேண்டும் என சசிகுமார் போராடும் காட்சிகளும் அட்டகாசமாக உள்ளது. மேலும் ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த லிஜோமோல் ஜோஸ் ஃப்ரீடம் படத்தில் அவருக்கான கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக எழுதப்படாத நிலையிலும், அவர் வரும் காட்சிகளில் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார். மேலும் ஜிப்ரானின் பின்னணி இசை ஃப்ரீடம் படத்துக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்துள்ளது. அதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலி படம் போலவே இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஃப்ரீடம் படத்தை பார்த்தால் கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும். அது வேறு கதை, இது வேறு கதை. ஒட்டுமொத்தமாக உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாகும் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!