US-ல் உள்ள NASDAQ- ல் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய SaaS நிறுவனம் Freshworks Inc ஆகும். Freshworks Inc ஆனது உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு கிளவுட் (Cloud) அடிப்படையிலான பின்வரும் வணிக மேலாண்மை பயன்பாடுகளை வழங்குகிறது.
- Cloud-based customer support software.
- Online IT service management software.
- Cloud-based call center software.
- Enterprise chat application.
- Sales CRM software.
- Marketing software for digital marketers.
- Enterprise collaboration software.
- Website monitoring tool.
Freshworks Inc ஆனது 2010-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட ஒரு கிளவுட் (cloud) அடிப்படையிலான Software service நிறுவனமாகும். கிரிஷ் மாத்ருபூதம் இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
கிரீசு மாத்ருபூதத்தின் ஆரம்ப வாழ்க்கை
கிரீசு மாத்ருபூதம் (Girish Mathrubootham) தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பாவும், அம்மாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால், தனது அத்தை வீட்டில்தான் வளர்ந்தார்.
பிள்ளைப் பருவத்திலேயே பெரும் கஷ்டத்தை எதிர்கொண்டு திருச்சியில் 12-ம் வகுப்பு வரை படித்து பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அவருடைய அப்பா படிப்புச் செலவுக்கான கட்டண பணத்தைத் திரட்ட அங்கும் இங்கும் அலைந்தார். பணம் தர மறுத்த நெருங்கிய உறவினர்கள், ‘மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே’ என்றும் அறிவுரை சொன்னார்கள். அந்த அறிவுரை கிரிஷ் மற்றும் கிரிஷின் தந்தையை ஆழமாகக் காயப்படுத்தியது. அவருடைய அப்பா யார் யாரிடமெல்லாமோ கடன் பெற்று, கல்லூரியில் பணம் கட்டி, கிரிஷை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்.
கிரீசு மாத்ருபூதம் பெற்ற தொழில் வளர்ச்சி
இன்ஜினீயரிங் முடித்த கிரிஷ் சென்னையில் எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்த போது HCL நிறுவனத்தின் சிஸ்கோ ஆப்ஷோர் சென்டரில் ஜாவாவைக் கற்றுத் தரும் Trainer வேலை கிடைத்தது. பின்பு 2001-ம் ஆண்டில் Zoho நிறுவனத்தில் ப்ரீசேல்ஸ் என்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு 18 மாதங்கள் வரை மற்றவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் வேலையை செய்தார். அதன் பிறகு 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் Product Manager-ராக Zoho நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் வருமானத்தை சேர்த்து 2010-ம் ஆண்டு Zoho நிறுவனத்தின் Vice President என்கிற அளவுக்கு உயர்ந்தார்.
Freshdesk என்ற நிறுவனம் Freshworks Inc என்று வளர்ச்சி பெற்றது
சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த விரும்பிய கிரிஷ் மாத்ருபூதம் தனது Zoho நண்பர் கிருஷ்ணசாமி மற்றும் நான்கு பேருடன் சேர்ந்து, 2018 ஆம் ஆண்டு சென்னையில் Freshdesk என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார். இரவு பகல் என்று பார்க்காமல் ஆறு பேரும் ஒன்பது மாதங்களுக்கு உழைத்த பிறகு தங்களது முதல் புராடக்ட்டை வெளியிட்டார்கள். அவர்கள் வெளியிட்ட 4வது நாளில் ஆஸ்திரேலியாவிலிருந்து முதல் கஸ்டமர் ஒரு போன்கால் செய்தார். அவர் அந்த புராடக்ட்டை இரண்டரை மணி நேரம் பயன்படுத்திப் பார்த்து, உடனே கிரெடிட் கார்டில் பணம் கட்டிவிட்டார். அதை தொடர்ந்து முதல் 100 நாள்களில் 100 கஸ்டமர்களாகக் கிடைத்தார்கள். அது 200 நாள்களில் 200 ஆக உயர்ந்தது. இன்றைக்கு 4,000 ஊழியர்கள் வேலை பார்க்கும் கிரிஷின் நிறுவனத்தின் மொத்த கஸ்டமர்களின் எண்ணிக்கை 50,000-த்துக்கும் மேல் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் Freshworks Inc என்ற பெயர் மாற்றம் பெற்றது.
Software as a Service ( SaaS) தொழில்நுட்பம்
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான Software-ரை தயார் செய்து, அதை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடுவது வழக்கமான பழைய முறை ஆகும். ஆனால் ஒரு நிறுவனத்துக்குத் தேவையான Software-ரை முழுத் தொகை கொடுத்து வாங்காமல், மாதம்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்குரிய பணத்தை மட்டும் கட்டி பயனர்கள் பயன்பெறுவது Software as a Service (SaaS) என்ற தொழில்நுட்பத்தின் புதிய நடைமுறை ஆகும். உலகில் உள்ள எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானால் Software சர்வீஸைத் தந்து பணம் சம்பாதிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. கிரிஷ் மாத்ருபூதம் உலகத்தில் உள்ள முக்கிய நாடுகளில் சின்ன அலுவலகங்களை அமைத்து அதன் மூலம் பல ஆயிரம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார்.
Freshworks Inc-ன் வளர்ச்சி
Freshworks Inc-ன் தலைமையகம் கலிபோர்னியாவில் உள்ளது. இதன் R&D மையம் சென்னையில் செயல்படுகிறது. சர்வதேச நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ள Freshworks-ன் நிகர மதிப்பு $700 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்நிறுவனம் அடைந்துள்ள உன்னத வருவாய் வளர்ச்சி பின்வருமாறு
- 2018 ஆம் ஆண்டு வருவாய் – $100 +
- 2020 ஆம் ஆண்டு வருவாய் – $200 +
- 2021 ஆம் ஆண்டு வருவாய் – $300 +
- 2022 ஆம் ஆண்டு வருவாய் – $400 +
தற்போது Freshworks Inc ஆனது 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் $1 பில்லியன் என்ற மொத்த வருவாயை அடைவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.