இயற்கையின் மிக அழகிய அதிசயங்களில் ஒன்றான இரவில் ஒளிரும் தன்மையை கொண்ட (Fun Facts About Fireflies) மின்மினிப் பூச்சிகள் ஆனது வண்டு இனத்தை சேர்ந்தவை ஆகும். இவை மழைக்கால இரவு நேரங்களில் செடிகளில் ஒளிரும். இவை வேடிக்கையான உண்மைகள் மற்றும் சுவாரசியங்களை கொண்டுள்ளன.
மின்மினிப் பூச்சிகளின் தனித்துவமான ஒளிரும் தன்மை
மின்மினிப் பூச்சிகள் (Fun Facts About Fireflies) தங்கள் அடிவயிற்றில் உள்ள சிறப்பு உறுப்புகள் மூலம், வெப்பமில்லா ‘குளிர் ஒளியை’ (Bioluminescence) உருவாக்கி ஒளிர்கின்றன. மின்மினிப் பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் உள்ள லூசிஃபெரேஸ் (Luciferase) என்ற என்சைமே இதற்கு காரணமாகும். இந்த லூசிஃபெரேஸ் (Luciferase) என்ற என்சைமானது ஆக்சிஜன், கால்சியம் மற்றும் ATP ஆகியவற்றுடன் கலந்து லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதிப்பொருளைத் தூண்டி ஒளியை உருவாக்குகின்றது. மின்மினிப் பூச்சிகள் இணை சேருவதற்காகவும், மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த ஒளிர்தல் உதவுகின்றன.
மின்மினிப் பூச்சிகளின் வசிப்பிடம்
ஈரப்பதமான இடங்கள், மழைக்காடுகள், குளக்கரைகள், மற்றும் ஆற்றங்கரைகள் தான் மின்மினிக்கு பிடித்த வாழ்க்கைக்கான இடங்கள். வறண்ட பகுதிகளில் இவை வசிக்காது. மழைக்காடுகள்தான் இவற்றின் முக்கியமான வசிப்பிடம் ஆகும்.
மின்மினிப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி
மின்மினிப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி ஆனது முட்டைப் பருவம், புழுப் பருவம் (larva), பூங்காப் பருவம் (pupa), வயது முதிர்ந்த பூச்சிப் பருவம் (adult) என 4 கட்டங்களைக் கொண்டுள்ளது.
மின்மினிப் பூச்சிகளின் ஆயுட்காலம் குறைவு
மின்மினிப் பூச்சிகள் 2 வருஷம் வரை நிலத்துக்கு அடியிலோ, அழுகிய மரத்திலோ லார்வாவாக இருந்து நத்தை, மற்றும் புழுக்களை சாப்பிடும். இவை பெரும்பாலான வாழ்க்கையை லார்வாவாக கழித்து வளர்ந்த மின்மினியாக 2 வாரம் முதல் 2 மாதம் மட்டுமே உயிர் வாழும். இவற்றின் ஆயுட்காலம் மிகக்குறைவு ஆகும்.
மின்மினிப் பூச்சிகளின் இனச்சேர்க்கை
பருவமழைக்கு முன்னால் உள்ள பருவம் மின்மினிப் பூச்சிகளின் இனச்சேர்க்கைக்கு உகந்த பருவம் என்பதால் இக்கால கட்டத்தில் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
மின்மினிப் பூச்சிகளின் சுவாசிக்கும் முறை
மின்மினிப் பூச்சிகளின் உடலில் நுரையீரல் அமைப்பு இல்லை. அதனால் அவை ட்ராக்கியோல்கள் மூலம் சுவாசிக்கின்றன.
மின்மினிப் பூச்சிகளின் உணவு மற்றும் வேட்டையாடும் முறை
(Fun Facts About Fireflies) மின்மினிப் பூச்சிகள் இரையை (மண்புழுக்கள், நத்தைகள்) கொடுக்குகள் மூலம் மயக்கி, அவற்றின் உள் உறுப்புகளை கூழமாக்கி உணவாக உறிஞ்சுகின்றன. நீர் குடிப்பது போல இவை இரையை உண்ணுகின்றன. மின்மினிப் பூச்சிகள் புழுப்பருவத்தில் அதிக அளவில் உண்ணும். வயது முதிர்ந்து மின்மினிப் பூச்சியான பின்பு குறைவாக உண்ணும் அல்லது உண்ணாமலே இருக்கும். சில வகை மின்மினிப் பூச்சிகள் சாப்பிடவே சாப்பிடாது. மேலும் சில வகை மின்மினி பூச்சிகளுக்கு வளர்ந்த பிறகு வாயே இருக்காது. ஜோடி சேர்ந்து முட்டை இடுவது மட்டுமே இவற்றின் ஒரே வேலை ஆகும்.
மின்மினிப் பூச்சிகளின் ஜோடி தேடும் உத்தி
மின்மினிப் பூச்சிகள் தங்கள் இணையை ஈர்க்கவே ஒளி வீசுகின்றன. ஒளி வீசுவதன் மிக முக்கியமான காரணம் தங்கள் இணையை ஈர்ப்பதே ஆகும். ஆண் பூச்சிகள் பொதுவாக பறந்து கொண்டே ஒளியை உமிழுகின்றன. பெண் பூச்சிகள் செடிகளில் அமர்ந்து கொண்டே பதிலுக்கு ஒளியை உமிழுகின்றன. மின்மினிப் பூச்சிகள் ஒளிரல் மூலம் இனப்பெருக்கம் செய்து சமநிலையை பேணுகின்றன.
மின்மினிப் பூச்சிகளின் தற்காப்பு தந்திரம்
மின்மினிப் பூச்சிகள் எதிரிகள் தங்களை தாக்க வரும்போது தங்கள் உடலில் இருந்து ஒரு துளி ரத்தத்தை வெளியேற்றும். இந்த ஒரு துளி ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டவை ஆகும். எனவே, இவற்றின் எதிரிகள், தவளைகள் மற்றும் பறவைகள் இவற்றை உண்பதைத் தவிர்க்கின்றன.
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகளின் Luciferase என்சைம்-னின் மருத்துவ பயன்பாடு
மின்மினிப் பூச்சிகளின் Luciferase என்ற என்சைம் மருத்துவ துறையில் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்க, மற்றும் உணவில் பாக்டீரியா இருக்கா என்று செக் பண்ண பயன்படுகிறது.