மராட்டி சினிமா உலகைச் சேர்ந்த இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் (Kishor Pandurang Balekar) இந்தப் படத்தின் (Gandhi Talks Review) மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
மவுனமே வலுவான உரையாடல்
கிஷோர் பாண்டுரங் பலேகர் இதற்கு முன்பாக சில மராட்டி சிறு படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். முதல் முறையாக விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த்சாமி போன்றோருடன் இணைந்து பணியாற்றி வசனமற்ற முழு லாங் ஃபீச்சர் படத்தை தமிழில் உருவாக்கியுள்ளார். கிஷோர் பாண்டுரங் பலேகர் “மவுனமே வலுவான உரையாடல்” என்ற கருத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி உள்ளதாவும் மற்றும் பணத்தின் சமூக தாக்கத்தை மௌன மொழியில் சித்தரிக்க விரும்பி செதுக்கி உள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார். முழுப் படத்தையும் வசனங்கள் இல்லாமல் உடல் மொழி மற்றும் முகபாவனைகளைக் கொண்டே சொல்லியிருக்கிறார்.
'காந்தி டாக்ஸ்'-ன் திரைக்கதை சுருக்கம்
மும்பை மாநகரத்தில் தனது நோய்வாய்ப்பட்ட அம்மாவுடன் வறுமையில் வாடும் மகாதேவ் (விஜய் சேதுபதி) வேலை தேடி அலைகிறார். ஒரு நேர உணவுக்கே போராடும் ஒரு ஏழை இளைஞனான மகாதேவ் தினசரி கூலித் தொழில்கள், மற்றும் சின்னசின்ன துணை வேலைகள் செய்கிறார். இளமைக்குரிய காதல் ஆசையில் எதிர் வீட்டில் வசிக்கும் அதிதி (அதிதி ராவ் ஹைதாரி) மீது காதல் கொள்கிறார். அம்மாவுக்கான மருத்துவ செலவுகள், வாடகை, மற்றும் கடன் என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மகாதேவ்வின் வாழ்க்கையில் ‘கடன் மதிப்பு’ தான் மையத்தில் இருக்கிறது.
இதற்கு மாறாக பெரிய பங்களா, கார், ஸ்டாஃப், சேஃப், கம்பீரமான வாழ்க்கை என எல்லாம் நிறைந்த பெரும் பணக்காரராக போஸ்மேன் (அரவிந்த் சாமி), இவரும் கடன் சுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் கணக்குகள், ஆசைகள் மற்றும் அவமானங்களை (Gandhi Talks Review) இப்படம் சித்தரிக்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் மற்றும் ஸூப்பர் ரிச்சு என எல்லாரின் வாழ்க்கையையும் ஒன்றாக முடிச்சு கட்டும் கருவி “நோட்டு” என்று முடிவு பண்ணும் விதத்தில் ‘காந்தி டாக்ஸ்’ திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கிஷோர் பாண்டுரங் பெலேகரின் இயக்கம் வித்தியாசமானது (Gandhi Talks Review)
கிஷோர் பாண்டுரங் பெலேகர் ஏழை, நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம், மற்றும் ஸூப்பர் ரிச்சு என எல்லாரின் வாழ்க்கையையும் ஒன்றாக முடிச்சு கட்டும் கருவி “நோட்டு” என்று முடிவு பண்ணும் விதத்தில் ‘காந்தி டாக்ஸ்’ மையக்கருவை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். பணத்தின் மதிப்பையும் மற்றும் வறுமையின் கொடுமையையும் இப்படம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு பாராட்டப்படுகிறது
விஜய் சேதுபதிக்கு இத்திரைப்படம் ஆனது ஒரு வித்தியாசமான முயற்சி ஆகும். இப்படத்தில் வசனங்கள் இல்லாமல் தனது உடல் மொழி மற்றும் முகபாவங்களால் திறம்பட நடித்துள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி பெரும் (Gandhi Talks Review) பணக்காரராக தனது வலிகளையும் வேதனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
விமர்சன ரீதியில் 'காந்தி டாக்ஸ்'
இப்படத்திற்கு மும்பை மற்றும் தமிழ்நாட்டில் நல்ல ஓப்பனிங் புக்கிங் கிடைத்து உள்ளது. முதல் நாளில் சுமார் 5-7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மௌன வடிவம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. அம்மா பாசம், மற்றும் காதலியுடனான ஏமாற்றக் காட்சிகள் சிறப்பு (Gandhi Talks Review) வாய்ந்தவை ஆகும். குறிப்பாக விஜய் சேதுபதியை மெயின்ஸ்ட்ரீம் ஹீரோவிலிருந்து நடிப்பு-மைய ஸ்டாராக மாற்றி உள்ளது.