Ganesh Chaturthi Celebration At Ambani House : கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள்
Ganesh Chaturthi Celebration At Ambani House :
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் (Ganesh Chaturthi Celebration At Ambani House) இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இந்த விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக இது விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டு, களிமண்ணால் செய்யப்பட்ட தற்காலிக விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் பூஜை அறையில் சிறிய களிமண் விநாயகர் சிலைகளை வைத்து கொழுக்கட்டை, சுண்டல், பொரியல் மற்றும் பழங்கள் வைத்து பூஜை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் நேற்று முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் (Ganesh Chaturthi Celebration At Ambani House) கோலாகலமாக நடைபெற்றது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த சதுர்த்தி திதி எந்த நாளில் வருகிறதோ அந்தநாளில் விநாயகர் சதுர்த்தியாக கருதப்படுகிறது. இந்த திதி இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாள் மதியத்திற்கு பிறகு வந்ததால், செப்டம்பர் 18 அன்று தென்னிந்தியாவில் கொண்டாடப்பட்டது. அதேபோல் சூரிய உதயத்தின் போது வரும் சதுர்த்தி திதி நாள் தான் விநாயகர் சதுர்த்தி என்பதால் நேற்று (செப்டம்பர் 19) விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, கொண்டாட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோரின் ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா (Ganesh Chaturthi Celebration At Ambani House) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஆலியா பட், இயக்குனர் அயன் முகர்ஜி, ரோஹித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், அனில் கபூர் ஹேமமாலினி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல், தமிழ் சினிமா பிரபலங்கள் இயக்குனர் அட்லீ – நடிகை பிரியா, விக்னேஷ் சிவன் – நயன்தாரா உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதனால் விழா நடக்கும் இடமானது மேலும் களைகட்டியது. அனைவரும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளை அணிந்து வந்தனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!
-
India Beat USA T20 WC : டி20 உலககோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிகரமான தொடக்கம்..!
-
With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? 'வித் லவ்' திரை விமர்சனம்.!
-
India U19 Champions 2026 : யு19 உலகக்கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
India T20 World Cup Fixtures : டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி ஆடும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்?
-
WPL 2026 Final : மகளிர் ஐபிஎல்.. டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி..!
-
Murugappa Group : 125 ஆண்டுகள் வரலாறு கொண்ட "முருகப்பா குழுமத்தின்" வெற்றிப் பயணம்.!
-
Postal Department Jobs 2026 : அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பிங்க.!
-
India U19 WC Final : U19 உலகக்கோப்பை.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி FINAL சென்றது இந்தியா.!
-
Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய 'கணினி சிப்'.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!