Gentleman Driver Of The Year 2025 : தீயாய் பரவும் நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் ஸ்பீச்
இத்தாலியின் வெனிஸ் நகரில் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ (Gentleman Driver of the Year 2025) விருது வழங்கும் விழாவில் “எனது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்காமல் என்னுடைய வாழ்க்கை ஆனது முடிவடையாது” என்று நடிகர் அஜித் குமார் கூறியது சமூக வலைதளங்களில் தீயைப் போல வேகமாகப் பரவி வருகிறது.
'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' விருது - ஒரு குறிப்பு
இத்தாலியின் வெனிஸ் நகரில் வருடந்தோறும் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ விருது ஆனது சர்வதேச அளவில் சிறந்த கார் பந்தய ரேஸருக்கு (பந்தய ஓட்டுநர்) வழங்கப்பட்டு வருகிறது. இத்தாலி வெனிஸில் வாழ்ந்த தொழில் முனைவோரும் மற்றும் கார் ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது ஆனது வழங்கப்பட்டு வருகிறது. பிலிப் சாரியோல் ஒரு சிறந்த கார் பந்தய ஓட்டுநர் ஆவார்.
அஜித் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' விருதை வென்றார்
இந்த 2025 ஆம் ஆண்டுக்கான ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ (Gentleman Driver of the Year 2025) விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது அஜித்தின் மோட்டார்ஸ் போர்ட் மீதான ஆர்வத்திற்காகவும் மற்றும் தீவிர முயற்சிக்காகவும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். இந்த மகிழ்ச்சி செய்தியை அஜித்தின் மனைவி ஷாலினி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த அங்கீகாரம் அஜித்தின் ரசிகர்கள் மற்றும் பந்தய சமூகத்தினரிடையே மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் நடத்தும் , “அஜித் குமார் ரேஸிங்” நிறுவனம்
நடிகர் அஜித் குமார் தீவிர கார் பந்தய வீரர் ஆவார். இவர் சினிமாவை தாண்டி, ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த குழு பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடிகர் அஜித் குமார் சர்வதேச அளவில் துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். நடிகர் அஜித் குமாரின் அணி ஏற்கனவே 24 மணி நேர மற்றும் 12 மணி நேர பந்தய வடிவங்களில் இரண்டு மூன்றாம் இடங்களையும் மற்றும் ஒரு இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளது. நடிகர் அஜித் குமாரின் அணி பெற்ற வெற்றிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியா இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க பெருமையை சேர்த்துள்ளன.
தீயாய் பரவும் அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்பீச் (Gentleman Driver of the Year 2025)
நான் எனது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன் என்ற அஜித்தின் ஸ்டேட்மென்ட் என்ற ஆனது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “அஜித் குமார் ரேஸிங்” என்ற கார் பந்தய நிறுவனத்தை நடத்தி வரும் நடிகர் அஜித் நிலுவையில் இருந்த தனது அனைத்து திரைப்படக் கமிட்மென்ட்களையும் முடித்துவிட்டு முழுமையாக விளையாட்டில் ஈடுபட்டு வருவதன் மூலம் அவரது சமீபத்திய சாதனைகள் ஆனது சாத்தியமாகி உள்ளது. தற்போது தனது முழுக்கவனத்தையும் ரேஸிங்கில் செலுத்தி வருகிறார்.
இத்தாலியில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜித்
“பிரெஞ்சு தொழிலதிபர், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் நினைவாக வழங்கப்படும், இந்த விருது தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், பிலிப் சாரியோல் மிகவும் அன்பானவர் மற்றும் அற்புதமான மனிதர் என அவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மோட்டார்ஸ்போர்ட் உலகில் என்னுடைய அனுபவம் ஆனது உற்சாகமாகவும், சவாலாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்காமல் என்னுடைய வாழ்க்கை ஆனது முடிவடையாது” என்று கூறியுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!