Ghilli Box Office Collection : ரீ-ரிலீஸ் ஆனா விஜய்யின் கில்லி முதல் நாள் வசூல்
நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் (Ghilli Box Office Collection) நிலவரம் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் வெளியான படம் “கில்லி”. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பாண்டு, தாமு ஆகியோர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வசூலில் சாதனை படைத்தது. இப்போது தொலைக்காட்சியில் படம் போட்டாலும், ஒரு காட்சியைக் கூட தவறவிடாமல் பார்ப்பவர்கள் ஏராளம். சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியதில் இந்தப் படம் பெரும் பங்கு வகித்தது. கில்லி வெளியான காலத்தில் ரூ.50 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ரீ-ரிலீஸான கில்லி :
- இதற்கிடையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படத்தை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. பழைய படங்கள் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியான நிலையில் கில்லி படத்தை வெளியிட வேண்டும் என்று கடந்த ஓராண்டாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் மீண்டும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் 80 சதவீத காட்சிகள் ஹவுஸ் ஃபுலாக மாறியுள்ளன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புதிய படங்கள் போல தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன.
Ghilli Box Office Collection :
இந்நிலையில் கில்லி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் (Ghilli Box Office Collection) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று விடுமுறை என்பதால் அனைத்து காட்சிகளும் நிரம்பியது. ரீ ரிலீஸில் கில்லியின் மொத்த வசூல் சாதனையான ரூ.50 கோடியை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!