Ghilli Collection 2024 : டைட்டானிக் படத்தின் வசூலை மிஞ்சிய கில்லி
நடிகர் விஜய் நடிப்பில் ரீ ரிலீசாகியுள்ள கில்லி திரைப்படம் டைட்டானிக் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை (Ghilli Collection 2024) படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த திரைப்படம் கில்லி ஆகும். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட்டாக ஆன இப்படம் நடிகர் விஜய்யை அவரது திரையுலக வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை மீண்டும் வெளியிடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வௌியான கில்லி படமும் கடந்த 22ம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகர் விஜய் தற்போது த.வெ.க கட்சியை தொடங்கிவிட்டதாலும், அவர் கோட் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்ததால் இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், மற்ற பெரிய படங்கள் வெளியாகாத காரணத்தாலும், குடும்பத்துக்கு ஏற்ற படம் என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தற்போது வெளியாகும் புதிய படங்களுக்கு இணையாக படத்தின் வசூல் (Ghilli Collection 2024) குவிந்து வருகிறது.
Ghilli Collection 2024 - டைட்டானிக் வசூலை மிஞ்சிய கில்லி :
இப்படம் வெளியாகி 9 நாட்களில் 20 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் படம் என்ற சாதனையை கில்லி (Ghilli Collection 2024) பெற்றுள்ளது. இந்த சாதனை இதற்கு முன்பு 2012ல் டைட்டானிக் பெற்றது. கில்லி தமிழகத்தில் மட்டும் ரூ.18.40 கோடியும், கர்நாடகாவில் ரூ.1.20 கோடியும், மற்ற இந்திய அளவில் ரூ.65 லட்சமும் வசூலித்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 20 கோடியே 25 லட்சங்களை வசூலித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கில்லி வசூல் மழையை பொழிந்து வருகிறது. கனடாவில் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், மலேசியாவில் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரும், சிங்கப்பூரில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், இலங்கையில் 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், பிரான்சில் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், இங்கிலாந்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள். ஐரோப்பாவின் இதர பகுதிகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் டாலர்கள், உலகின் பிற பகுதிகளில் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள், வெளிநாடுகளில் மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 6 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. கில்லி படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் ரூ.26 கோடியே 50 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் படம் என்ற சாதனையை படைத்துள்ள கில்லி படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!