Ghilli Re-release : 20 வருடங்களுக்கு பிறகு வெளியான விஜய்யின் 'கில்லி'
Ghilli Re-release :
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் இன்று மீண்டும் (Ghilli Re-release) வெளியாகியுள்ளது. 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கில்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் கில்லி ரீ ரிலீஸ் மிகப்பெரிய சாதனையை படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நேற்று வெளியான கில்லி படத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்க்கு 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான மல்டி ஸ்டார் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்காத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் தியேட்டர் உரிமையாளர்களை சற்றே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ரீ ரிலீஸ்னா என்னன்னு இன்னைக்கு பார்ப்பீங்க என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வெளிநாட்டில் இருந்து உள்ளூர் ரசிகர்கள் வரை லியோவுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஆன்லைனில் தவமாய் தவம் செய்து கிடந்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் நேற்று வெளியான கில்லி படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் தளபதி ரசிகர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் பரபரப்பாக நடனமாடி, அலப்பறையை கிளப்பிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கில்லி படத்தின் ரீ-ரிலீஸை (Ghilli Re-release) வெளிநாட்டு ரசிகர்களே இப்படி கொண்டாடி வரும் நிலையில், தமிழக ரசிகர்கள் அதை விட சிறப்பாக செய்யப் போகின்றனர் என தளபதி ரசிகர்கள் கில்லி படத்தை பார்க்க கிளம்பிவிட்டனர். கில்லி 600 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வசூல் எவ்வளவு என்பது நாளை தெரியும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!