Gistak Media – Cinema News | Trending News | Latest News

Global City In Chennai : தமிழக அரசு சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் 'குளோபல் சிட்டி' உருவாக்க திட்டமிட்டுள்ளது

இது சென்னை மக்களுக்கு பல தரப்பட்ட நன்மைகள் தரும் திட்டம் ஆகும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) இத்திட்டத்தை (Global City In Chennai) கையாள உள்ளது.

சென்னை மாநிலத்தில் நகரமயமாக்கல் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற நகரங்களிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் இடநெரிசலை சமாளிக்கவும், மற்றும் பிற வளர்ச்சிகளை மேம்படுத்தவும் சென்னை மாநகரை விரிவுபடுத்துவதின் அவசியம் ஆனது உணரப்பட்டது.

ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்கும் திட்டம்

நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆனது மக்களின் பொதுத் தேவைகளைப் நிறைவு செய்யும் ஒரு சிறப்பு வாய்ந்த சிறந்த திட்டம் (Global City In Chennai) ஆகும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர். நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதன் தொடக்கமாக சென்னைக்கு அருகில் புதிய நகரம் ஆனது உருவாக்கப்படவுள்ளது. இந்த புதிய நகரம் ஆனது

● High tech companies,
● IT parks,
● Shopping complexes,
● Banking and Insurance Companies
● Financial technology trading zones
● Research and Development Centers
● Business centers and conference halls உள்ளிட்ட சிறந்த நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
● Public and private sector educational institutions and healthcare facilities-களையும் இந்த புதிய நகரம் ஆனது பெற்றிருக்கும்.

ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருமழிசை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இருங்காட்டுக்கோட்டை, புல்லலூர், சூரை, தொடுகாடு, மேல்பாடி, மீஞ்சூர், மற்றும் சோகண்டி ஆகிய இடங்கள் சாத்தியமான பகுதிகளாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை சரியான இடம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல் ஒரு சவாலாகும். CMDA ‘குளோபல் சிட்டி’ இந்தியா உருவாக்குவதற்கான வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

Global City In Chennai - Gistakmedia

'குளோபல் சிட்டி' திட்டத்தின் சிறப்புப் பலன்கள் (Global City In Chennai)

● நகர்ப்புற வாழ்க்கை முறையின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்தும்.
● தனியார் மற்றும் அரசு முதலீடுகள் விரிவுபடுத்தப்பட நல்ல வாய்ப்புகள் வழங்கும்.
●அதிக உற்பத்தி மற்றும் உற்பத்தியில் வேலைக்கான வாய்ப்புகள் (Global City In Chennai) உருவாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
● மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்படும்.
● பொழுதுபோக்கு அம்சங்கள் நவீன முறையில் அமைக்கப்படும்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ‘குளோபல் சிட்டி’ திட்டம் ஆனது தமிழ்நாட்டின் $10 பில்லியன் கனவு ஆகும். இந்த லட்சியத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் விரைவில் TIDCO-வால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதேபோல் கர்நாடகத்தில் பெங்களூருக்கு வடக்கேயும் மற்றும் ஆந்திராவில் ஹைடரபாத்தின் தெற்கே ஒரு புதிய நகரத்தை உருவாக்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.

Latest Slideshows

4 thoughts on “Global City In Chennai : தமிழக அரசு சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கரில் ‘குளோபல் சிட்டி’ உருவாக்க திட்டமிட்டுள்ளது”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top