Global Investors Meet: தமிழ்நாடு 29/11/2023 அன்று 5,500 கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான MoUs கையெழுத்திட்டுள்ளது
Global Investors Meet - 5,567 கோடி முதலீடுகளை கொண்டு வர 293 MoUs கையெழுத்தானது :
சென்னையில் 29/11/2023 அன்று நடந்த தமிழ்நாடு அரசாங்கத்தின் முதலீட்டு மாநாட்டில் ₹5,566.92 கோடி முதலீட்டை முன்மொழிந்து 293 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆனது கையெழுத்தானது. வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை (GIM – Global Investors Meet) முன்னிட்டு, தமிழக அரசு ஆனது மாவட்டங்கள் தோறும் முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. ஜனவரி 7, 2024 மற்றும் 8, 2024 தேதிகளில் திட்டமிடப்பட்ட GIM (Global Investors Meet-க்கு) முன்னதாக MSMEsகளுடன் (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன்) 5,566.92 கோடி ரூபாய்க்கான ஒட்டுமொத்த முதலீட்டை முன்மொழிந்து 293 ஒப்பந்தங்கள் ஆனது 29/11/2023 அன்று கையெழுத்தானது.
29/11/2023 அன்று கையெழுத்தான 293 MoUs புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 26,477 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் இது 2030க்குள் தமிழ்நாடு TN $1 ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற உதவும். 5,567 கோடி முதலீடுகள் ஆனது சென்னை மண்டலத்தில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல், தோல் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றில் 6,693 கோடி கூட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு ஆனது கையெழுத்திட்ட ஒரு சில நாட்களில் இந்த 293 MoUs புரிந்துணர்வு ஒப்பந்த வளர்ச்சி ஆனது ஏற்பட்டுள்ளது.
MSME அமைச்சர் T.M.அன்பரசன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது, “₹4,368 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்கள் இலக்குக்கு எதிராக, ₹5,567 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெற்றுள்ளோம்” என்று பெருமிதம் கொண்டார். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த முதலீட்டு மாநாடு ஆனது நடத்தப்படுகிறது. ₹2,97,196 கோடிக்கான 241 திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஈர்க்கப்பட்டுள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!