கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றாக போற்றப்படுவது புனித வெள்ளி. புனித வெள்ளி இந்த வாரம் முழுவதும் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சாம்பல் புதன், புனித வியாழன் மற்றும் புனித வெள்ளி என அனைத்து நாட்களும் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் நாட்கள் ஆகும்.
Good Friday 2025
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் புனித வெள்ளி பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளி முதன்முதலில் எப்போது அனுசரிக்கப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. இருப்பினும், புனித வெள்ளியைக் கொண்டாடும் வழக்கம் 4 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாட்களில் ஒன்று புனித வெள்ளி. ஆங்கிலத்தில் Good Friday என்று அழைக்கப்படுவதால் பலரும் இதை கொண்டாட்ட நாளாகக் கருதுகின்றனர். ஆனால், தேவ தூன், தேவ மைந்தனான இயேசு கிறிஸ்து, உலக உயிர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டு சிலுவையில் அறையப்பட்ட தியாக நாளாகவும் இது அமைகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.
புனித வெள்ளி வரலாறு
Good Friday என்ற சொல் God’s Friday என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது இறைவனுக்கான நாள். மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனம் திரும்பி கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இது நினைவூட்டுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களால் சித்திரவதை செய்யப்பட்டார்.
இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளிக்கு முன்பாக தவக்காலத்தைக் கடைப்பிடிக்கின்றனர். உலகெங்கிலும் புனித வெள்ளி தினமானது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது, அவற்றில் கருப்பு வெள்ளி மற்றும் சிறப்பான வெள்ளி ஆகியவை அடங்கும். புனித வெள்ளியன்று இயேசுவின் தியாகத்தை மதிக்கும் வகையில் மக்கள் மாமிசத்திற்கு பதிலாக மீன் சாப்பிடுகிறார்கள்.
சிலர் இந்த நாளில் அசைவ உணவை சாப்பிடுவதில்லை. சில நாடுகளில், ரொட்டியில் சிலுவையை வரைந்து புனித வெள்ளியன்று சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். வேறு சில நாடுகளில், ஈஸ்டர் வரை மிகவும் மென்மையாக தேவாலய மணிகளை அடித்து துக்கம் அனுசரிப்பது வழக்கம்.
புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குறுத்தோலை ஞாயிறு என்றும், அதற்கு முந்தைய நாள் பெரிய வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி என்றும், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்பப்படும் நாளை ஈஸ்டர் என்றும் கருதப்படுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதும், பரமபிதாவே தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்யும் இவர்களை மன்னியும் என்று தான் இறைவனிடம் வேண்டினார். அதனால் புனித வெள்ளி பாவ மன்னிப்புக்கான நாளாகக் கருதப்படுகிறது.
சிறப்பு பிரார்த்தனை
இயேசு தனது இரத்தத்தால் உலகத்தின் பாவங்களை நீக்கிய புனித வெள்ளி அன்று, சிலர் சாப்பிடாமல் முழுமையாக நோன்பு இருப்பார்கள். கத்தோலிக்கர்கள் மற்றும் CSI உட்பட அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த நாளை ஒரு சோகமான நாளாகக் கடைப்பிடிக்கின்றனர். பொதுவாக இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. புனித வெள்ளி அன்று மக்கள் தேவாலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துகின்றனர். இறைவனும், மனிதகுலமும் ஒன்றிணையும் நாளாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இந்நிலையில் புனித வெள்ளி 18/04/2025 வெள்ளிக்கிழமை (Good Friday 2025) அன்று கொண்டாடப்படுகிறது.