Google Meet Real Time Speech Translation : கூகுள் மீட்டில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்
சமீப காலமாக கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய தொழிநுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் கூகுள் மீட் (Google Meet) தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் (Google Meet Real Time Speech Translation) செய்யும் புதிய அம்சத்தை கூகுள் I/O 2025 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு உதாரணம் என்றால் நாம் தமிழில் பேசினால் நம் குரலிலேயே அவர்களுக்கு ஏற்ற மொழியில் மொழிமாற்றம் செய்து தரும். கூகுளின் இந்த புதிய அம்சத்தின் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும், மக்கள் பேசுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது.
Google Meet Real Time Speech Translation
கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய அம்சத்தின் மூலம் ஆன்லைன் அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் தங்களின் ஐடியாக்களை எந்த சிரமும், இல்லாமல் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். மேலும் நாம் பேசுவதை எதிர் புறம் உள்ளவர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் மொழிபெயர்த்து தரும் அளவில் இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுளின் இந்த குரல் உரையாடலை மொழிமாற்றம் செய்யும் புதிய அம்சமானது முதலில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என இரண்டு மொழிகளில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் இத்தாலியன், ஜெர்மன், போர்ச்சுகீசியம் என பல உலக மொழிகளில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கூகுள் மீட் (Google Meet) அம்சம் தற்போது கூகுளின் AI சப்ஸ்கிரிப்ஷன் வைத்துள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும், இந்த 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் கூகுள் பயனர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என கூகுள் I/O 2025 நிகழ்வில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த குரல் உரையாடல் மொழிமாற்றம் செய்யும் இந்த அப்டேட் தற்போது வரை இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கூகுள் ஜெமினி செயலியில் பிரீமியம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Latest Slideshows
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!
-
Vishwanath and Sons First Look : சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு