Government Of Tamil Nadu Introduce GPS Method : தமிழக அரசு ஜிபிஎஸ் முறையில் புதிய பட்டா வழங்க திட்டமிட்டுள்ளது
புவிசார் தகவல்களுடன் ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டத்தை (Government Of Tamil Nadu Introduce GPS Method) விரைவில் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் இடத்தின் பட்டாக்களை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் புதிதாக நிலம் வாங்கும் உரிமையாளர்கள் அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் அளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கால நேரம் வீணாகிவிடுகிறது. இதன் காரணமாக பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவானது முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் வருவோருக்கு முதலில் சேவை திட்டம் :
மேலும் உட்பிரிவு செய்ய தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க “முதலில் வருவோருக்கு முதலில் சேவை” என்ற புதிய திட்டத்தை வருவாய் துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Government Of Tamil Nadu Introduce GPS Method :
ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் முதலில் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரப்பதிவு முடிந்ததும் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இத்திட்டத்தை (Government Of Tamil Nadu Introduce GPS Method) முறையாக செயல்படுத்துவதில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் நிலையில் பல்வேறு தலையீடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நில அளவையாளர் :
இதன்காரணமாக புதிதாக வழங்கப்படும் பட்டாவில் சொத்து குறித்து அனைத்து விவரங்களையும் துல்லியமாக குறிப்பிட வருவாய் துறை முடிவு செய்து இருக்கிறது. சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலங்களை நில அளவையாளர் அளந்து அதன் நான்கு எல்லைகளையும் அடையாளப்படுத்திய பிறகே மேனுவல் முறையில் நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும். அந்த உட்பிரிவின் 4 பக்கத்திலும் உள்ள சர்வே எண்கள் அல்லது உட்பிரிவுகள் விவரங்கள் அதில் குறிப்பிடப்படும்.
இந்த பழைய நடைமுறையை மின்னணுமயமாக்கும் வகையில் அந்த நிலத்தில் ஜிபிஎஸ் எனப்படும் புவிசார் தகவல்கள் சேர்க்கப்பட்டு அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகையிலிருந்து அந்த நிலம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற புள்ளி விவரங்களும் அந்த நிலம் எப்போது அங்கு நில அளவை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட உள்ளது.
4 மாவட்டங்களில் அறிமுகம் :
ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டத்தை விருதுநகர், நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. உட்பிரிவு பட்டா மட்டுமல்லாமல் புதிய பட்டா வழங்குவதிலும் ஜிபிஎஸ் முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உட்பிரிவு பட்டா கையில் இருந்தாலே அதில் சம்பந்தப்பட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற அனைத்து விவரங்களை ஆன்லைனிலேயே பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!