Grand Slam Tennis : இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சாதனை
Grand Slam Tennis :
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் (Grand Slam Tennis) போட்டியான யு.எஸ் ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதி வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதிர்ச்சி அளித்தார். ஜோகோவிச் அரையிறுதியில் பென் ஷெல்டனை சந்தித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் ஜோகோவிச் 6 – 3, 6 – 2, 7 – 6, 6 – 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 36-வது கிராண்ட்ஸ்லாம் (Grand Slam Tennis) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது அவரது 100வது அமெரிக்க ஓபன் மற்றும் 87வது வெற்றி கூடுதல் போனஸ் ஆகும். அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் யாரை எதிர்கொள்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு அரையிறுதியில் டானில் மெத்வதேவ் – நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கார்ஸ் சந்திக்கிறார். இதில் வெற்றி பெறுபவர் ஜோகோவிச்சை எதிர்கொள்வார்.
ஏற்கனவே, விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை அல்கராஸ் வீழ்த்தியிருந்ததால், இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்ப்டன் ஜோடி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் (Grand Slam Tennis) பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
போபண்ணா ஜோடி :
போபண்ணா ஜோடி 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், யு.எஸ் ஓபன் பட்டத்தை வென்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!