Green Honeycreeper : ஒரு பக்கம் ஆண் மறுபக்கம் பெண் உடலமைப்பு கொண்ட "பச்சை நிற தேன் கொடி"
நாம் இதுவரை கண்டிராத மிக அரிதான ஒரு வகை பறவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் மிகப் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகம் பல்வேறு அதிசயங்கள் நிறைந்த உலகமாக இருக்கிறது. அந்தளவுக்கு இந்த பூமி நம்மைத் தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் இயற்கையின் சிறப்பாக இருக்கிறது.
Green Honeycreeper - பச்சை நிற தேன் கொடி பறவை :
அப்படியொரு அதிசயத்தைத் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அரிதிலும் அரிய நிகழ்வாக ஒருபாதி ஆண் மறுபாதி பெண் என இருக்கும் பறவை குறித்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குறிப்பிட்ட இன பறவையில் இதுபோன்ற அரிதான சம்பவம் கடந்த 100 ஆண்டுகளில் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. இந்த அரியவகை பறவையில் அதன் உடலமைப்பில் ஒரு பாதி ஆண் நிறத்தையும் மறு பாதியில் பெண் இறகுகளையும் கொண்டுள்ளது. ‘ஜினாண்ட்ரோமார்பிசம்’ என்று அழைக்கப்படும் இந்த பண்பை வெளிப்படுத்தும் அரிய பறவைகளில் இதுவும் ஒன்றாகும்.
தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மனிசலேஸ் அருகே உள்ள ஒரு சிறிய பண்ணையில் தான் இந்த பறவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘பச்சை நிற தேன் கொடி பறவை’ அதாவது ஆங்கிலத்தில் இதை ‘Green Honeycreeper’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஜான் முரில்லோ என்பவர் தான் இந்த பறவையை முதலில் கண்டுபிடித்தார். இந்த பறவையின் புகைப்படத்தில் ஒரு பாதியில் அக்வா மற்றும் நீல இறகுகளும் மறுபுறம் மஞ்சள் மற்றும் பச்சை நிற இறகுகளும் உள்ள நிலையில் இரண்டிற்கும் நடுவே தெளிவான கோடு உள்ளது. இந்த தேன் கொடி பறவையில் (Green Honeycreeper) ஆண் பறவைகள் மட்டும் கறுப்புத் தலையுடன் கூடிய பிரகாசமான நீல நிற இறகுகளைக் கொண்டிருக்கும். பெண் பறவைகள் பச்சை நிறத்தில் இருக்கும்.
ஆய்வாளர்களின் பதில் :
ஆனால் இந்த ‘Green Honeycreeper’ இரண்டும் சேர்ந்து கலவையான நிறத்தில் இருக்கிறது. இது குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்களால் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த பறவை இனத்திலும் இருதரப்பு ஜினாண்ட்ரோமார்ப் பார்க்க முடியாது. பறவைகளில் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது. இதற்கு முன்பு எங்கும் இதுபோல ஒன்றை யாரும் பார்த்தாக தெரியவில்லை. இது பிரமிக்க வைக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த தேன் கொடி பறவையின் உள் உறுப்புகளும் சரிபாதியாக ஆண் மற்றும் பெண் எனப் பிரிந்து இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில் ‘இதை இருதரப்பு ஜினாண்ட்ரோமார்பி என்கிறார்கள். இதில் ஒருபுறம் ஆண் மறுபுறம் பெண் இருக்கும். இந்த அறிய நிகழ்வு பெண் செல் பிரிவின் போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதில் ஏற்படும் பிழையிலிருந்து எழுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டு விந்தணுக்களால் இரட்டைக் கருத்தரித்தல் ஏற்படுகிறது’ என்கின்றனர். மேலும் ஆய்வாளர்கள் இந்த பறவையைப் பல மாதங்கள் சோதனை செய்துள்ளனர். அதில் அவர்களுக்கு இந்த பறவை வெளிப்புறம் மட்டுமின்றி உள்ளேயும் சரி பாதியாக 50% ஆணாகவும் 50% பெண்ணாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?